பாலிவுட் நடிகைகள் கிரிக்கெட் வீரர்களுடன் டேட்டிங் செய்வது, காதல் வயப்படுவது என்பது புதிதான ஒரு விஷயமல்ல என்றாலும் ஆது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. வயது வித்தியாசமின்றி இது போன்ற கிசுகிசுக்கள் அதிகம் வெளிவருகின்றன. 


சுப்மன்கில்லின் காதலி:


அந்த வகையில் இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் தற்போது தென்னிந்திய நடிகை ஒருவர் மீது கிரஷ் கொண்டுள்ளார் என்பதை அவரே சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சுப்மன் கில் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவுடன் காதல் என வதந்திகள் பரவி வந்த நிலையில் அதை சச்சின் எதிர்த்ததாகவும் வதந்திகள் பரவின.


அடுத்ததாக சுப்மன் கில் பாலிவுட் நடிகை சாரா அலி கானுடன் டேட்டிங் செய்து வருவதாக வதங்கிகள் பரவின. ஆனால் அதை முற்றிலும் மறுத்து நாங்கள் இருவரும் நண்பர்கள் என்பதை தெரிவித்தனர். தற்போது சுப்மன் கில்லுடன் தென்னிந்திய நடிகை ஒருவரை இணைத்து வைத்து வதந்திகள் பரவி வருகின்றன. இது தான் இணையத்தில் தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. 


 



சாரா அலி கான் - சுப்மான் கில் - சாரா சச்சின்


 


சுப்மான் கில் லேட்டஸ்ட் கிரஷ் யார்?  


தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகையாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அந்த ரசிகர்களில் ஒருவராக இணைந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுப்மன் கில். சமீபத்தில் சுப்மன் கில் உடன் ஊடகம் ஒன்று நடத்திய நேர்காணலில் அவரிடம் உங்கள் அபிமான நடிகை யார் என கேட்டதற்கு முதலில் மழுப்பலாக சிரித்த கிரிக்கெட் வீரர் பின்னர் ராஷ்மிகா மந்தனா என பதிலளித்துள்ளார். மேலும் அவர் மீது கிரஷ் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


ஒரு ஸ்டார் பேட்ஸ்மேன் தென்னிந்திய சினிமா நடிகை மீது கிரஷ் என கூறியது இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. ராஷ்மிகா மீது காதல் என  சுப்மன் கில் வெளிப்படையாக கூறியதற்கு ராஷ்மிகா என்ன பதிலளிக்க போகிறார் என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறார்கள் ரசிகர்கள். 


இப்படி காட்டுத்தீ போல பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் நேர்காணலில் கூறப்பட்டதாக பரவி வந்த போஸ்டுக்கு கீழ் "எந்த ஊடகத்திற்கு நான் இப்படி பதிலளித்தேன் என்பது எனக்கே தெரியவில்லை" என போஸ்ட் செய்துள்ளார் சுப்மன் கில். இதனால் காட்டுத்தீ  போல வேகமாக பரவிய வதந்தி அப்படியே புஸ்வானம் போல அடங்கி போனது.