2021ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையைத் தனது நண்பர் சாந்தனு ஹஸாரிகாவுடன் கொண்டாடியதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ஷ்ருதி ஹாசன். மும்பையில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடியுள்ள நடிகை ஷ்ருதி ஹாசன், மகிழ்ச்சியுடன் தனது படத்தை இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவேற்றியுள்ளார். அதில் அவர் `எங்கள் மனம் நிறைந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் இருந்து ஒரு முழுமையற்ற படம்.. உங்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த பண்டிகை வாழ்த்துகளைக் கூற விரும்புகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


நடிகை ஷ்ருதி ஹாசன் பதிவிட்டுள்ள இந்தப் படத்தில் ஷ்ருதி ஹாசன் புடவை அணிந்திருப்பதோடு, அவரது நண்பர் சாந்தனு ஹஸாரிகா பாரம்பரிய உடையை அணிந்திருப்பதையும் பார்க்க முடிகிறது. ஷ்ருதி ஹாசனும், சாந்தனு ஹஸாரியாவும் தங்கள் உறவு குறித்து பொதுவில் அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்ற போதும், இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருக்கும் பிரியத்தை இந்தப் படம் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் பலரும் கமெண்ட்களில் கூறி வருகின்றனர். நடிகை ஷ்ருதி ஹாசனும், அவரது நண்பர் சாந்தனு ஹஸாரிகாவும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும், இடங்களிலும் ஒன்றாகத் தென்படுவது சமீப காலங்களில் வாடிக்கையான ஒன்றாக மாறி வருகிறது.



சமீபத்தில் வட இந்திய ஊடகம் ஒன்றின் நேர்காணலின் போது, நடிகை ஷ்ருதி ஹாசனிடம் `காதலில் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறதா?’ என்று கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர், `காதலில் இருப்பது எப்போதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியது. அதுவே மிகச் சிறந்த உணர்வு. பிரேக்கப் நிகழ்வதும் அதிசயமானது என்றே கருதுகிறேன். ஏனெனில் அப்போது என்னால் பல புதிய பாடல்களை அதில் இருந்து உருவாக்க முடிகிறது. நான் அனைத்திலும் நல்ல விஷயங்களை மட்டுமே பார்க்கும் வழக்கம் கொண்டவள்’ என்று பதில் கூறியிருந்தார். 






அதே நேர்காணலில் அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியோடு இருப்பதாகவும், தனது நண்பருடன் உள்ள உறவில் பிற ஜோடிகளுக்கு இடையில் நிகழும் அனைத்து தருணங்களும் நிகழ்வதாகக் கூறியுள்ளார். இருவரும் அனைவரையும் போல சண்டையிடுவது, மேக்கப் போட்டுக் கொள்வது, உரையாடுவது ஆகியவற்றுடன் பிறரைப் போல மிகச்சிறந்த நண்பர்களாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.  



`வக்கீல் சாப்;, `க்ராக்’ ஆகிய படங்களின் வெளியீட்டைச் சமீபத்தில் கண்ட ஷ்ருதி ஹாசன், தற்போது தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் பெரிய பட்ஜெட் படம் ஒன்றில் நடித்து வருகிறார். `சலார்’ என்ற பெயரில் வெளியாகும் இந்தப் படத்தை `கே.ஜி.எஃப்’ பட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி வருகிறார். `சலார்’ படத்தில் இதுவரை பார்த்திராத புதிய வேடத்தில் பிரபாஸ் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.