கமல்ஹாசன்


உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் அவரது மகள் ஸ்ருதி ஹாசனுக்கும் இடையிலான தந்தை மகள் உறவு மிகவும் அழகானது. தனது தந்தையைப் பற்றி எல்லா இடங்களிலிம் பெருமையாக பேசும் ஒருவராக ஸ்ருதி ஹாசன் இருந்துள்ளார். அதே போல் தனது மகளுடன் ஒரு நண்பன் ஸ்தானத்தில் எப்போது உரையாடும் ஒருவராக கமல் இருந்துள்ளார்.


ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் இசையமைத்து இயக்கிய இனிமேல் பாடலுக்கு கமல் வரிகள் எழுதியிருந்தார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த பாடல் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை முன்னிட்டு கமல் மற்றும் ஸ்ருதி ஹாசன் இருவரும் உரையாடும் வீடியோ ஒன்றை ராஜ்கமல் யூடியுப் சானல் வெளியிட்டது. 


காதலைப் பற்றி கமல்


பிரிவதும் சேர்வதும் ஆகிய சுழற்சியை மையப்படுத்தி இனிமேல் பாடல் உருவானது . இந்தப் பாடலை எழுதிய அனுபவம் பற்றி ஸ்ருதி கமலிடம் கேட்டார் " இங்கிருந்து கொஞ்சம் தள்ளிப்போனால் கவிஞர் கண்ணதாசனின் வீடு இருக்கிறது. அப்படியான கவிஞர்கள் சுவாசித்த அதே மூச்சு காற்றைதான் நானுக் சுவாஸிக்கிறேன் என்று நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது. எழுதுவது என்பது எழுதுவது மட்டுமில்லை நிறைய படிப்பதும் தான் என்பதை எனக்கு உணர்த்தியவர் கண்ணதாசன். இணைவதும் பிரிவது பற்றியும் இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பே இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் எழுதியுள்ளார். இன்றையத் தலைமுறை காதல் என்பது இரு ஆண் பெண் என இரு தரப்பினரை பற்றியும் பேசுகிறது." என்று கமல் கூறினார்.


மிஸ் பண்ணா ரீல்ஸ் அனுப்புவார்


என்னை எப்போதாவது நீங்கள் மிஸ் செய்வது உண்டா என்று கமலிடம் ஸ்ருதி கேட்க. " அதெல்லாம் மிஸ் பண்ணுவேன். எங்காவது ரோட்டில் குழந்தைகள் நடந்து போவதை பார்த்தால் உடனே உன் ஞாபகம் தான் வரும். அதை வெளிப்படையாக சொல்லிக்கொள்ள மாட்டேன் " என்று கமல்ஹாசன் கூற " அதனால் உடனே எனக்கு ரீல்ஸ் அனுப்பிடுவீங்க." என்று ஸ்ருதி ஹாசன் கமலின் ரகசியத்தை போட்டு உடைத்துவிடுகிறார். உலகநாயகன் கமல்ஹாசன் கூட இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்த்துவிட்டு தன் மகளுக்கு அனுப்புவார் என்று யார் கற்பனை செய்து பார்த்திருப்பார்கள்.


இந்தியன் 2 மற்றும் தக் லைஃப்


கமல்ஹாசன் நடித்து உருவாகியுள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கிறது. மேலும் மணி ரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து வரும் தக் லைஃப் படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு வேலைகள் தொடங்கியுள்ளன. தற்போது நடிகர் சிலம்பரசனின் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு வருகின்றன. இப்படத்தில் ரஹ்மான் இசையில் கமல் ஒரு பாடலை எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.