பலதரப்பட்ட உணவு வகைகளை விரும்பி உண்பவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர் நடிகை ஷ்ருதி ஹாசன். மேலும், அவருக்கு சமைப்பதிலும் விருப்பம் இருப்பதாகக் கூறியுள்ளார். உணவு குறித்த அவரது பிரியத்தை அவரது ரசிகர்கள் பலருக்கும் தெரியும். எனினும் சமீபத்தில் ஷ்ருதி ஹாசன் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், சமையல் மீதான தனது பிரியம் குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதற்கான காரணம் என்ன தெரியுமா? கோடைக் காலத்தின் வெப்பமே இதற்குக் காரணம்!


சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பகுதியில் தனது சமையலறையில் இருந்து அப்டேட் ஒன்றைப் பகிர்ந்தார் ஷ்ருதி ஹாசன். அதில் அவர் சமைத்துக் கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டது. அதில் அவர் பாஸ்தா சமைத்துக் கொண்டிருக்கிறார். முகம் முழுவதும் வழியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டே, ஷ்ருதி ஹாசன் அதில் பேசியுள்ளார். `இந்த வெப்பத்தில் சமைப்பது எனக்கு மட்டும் தான் கொடுமையான அனுபவமாக இருக்கிறதா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். கோடைக் காலத்தில் சமையலறைகளில் நிற்பது கொடுமையானது என்பதை நம்மில் பலரும் அறிவோம். 


தொடர்ந்து அவர், `இந்தக் கோடைக் காலத்தில் எனது சமையல் ஆசையே போய்விட்டது.. நாம் கோடைக் காலத்தில் இருக்கிறோமா அல்லது இதுதான் வாழ்க்கையா?’ எனவும் கூறியுள்ளார். 






தனது சமூக வலைத்தளப் பதிவுகள் மூலமாக உணவு தொடர்பான பல்வேறு பதிவுகளை மேற்கொண்டு வருகிறார் நடிகை ஷ்ருதி ஹாசன். சமீபத்தில், `சலார்’ திரைப்ப்படத்தில் நடித்த தன்னுடைய சக நடிகர் பிரபாஸ் அளித்த சுவையான வெஜிடேரியன் உணவு வகைகளை சாப்பிட்டதைப் பதிவிட்டார் ஷ்ருதி ஹாசன். தான் இறைச்சியை விரும்பி உண்பவர் என்ற போது, நடிகர் பிரபாஸ் அவருக்கு அனுப்பிய ஐந்து விதமான சைவ உணவுகளை உண்டு அதுகுறித்து கருத்து பகிர்ந்திருந்தார். சாம்பார், ரசம், பீன்ஸ், ரொட்டி முதலானவை அவருக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் அதனைப் படமாக எடுத்து பதிவிட்டிருந்தார். 


வெவ்வேறு உணவு வகைகள், வெவ்வேறு கலாச்சாரங்கள் ஆகியவற்றை விரும்பும் ஷ்ருதி ஹாசன் பல்வேறு உணவு வகைகளைப் பதிவிட்டுள்ளார். மேலும், அவருக்கு வங்காளத்தில் செய்யப்படும் உணவுகளும் பிடிக்கும். அதுகுறித்து, சில படங்களை வெளியிட்டு பதிவில் கூறியிருந்தார் ஷ்ருதி ஹாசன். அவற்றுள் மட்டன், தேங்காய் இறால் கறி, உருளைக் கிழங்கு ஃப்ரைஸ், அரிசி சோறு முதலானவை இடம்பெற்றிருந்தன. 



வெவ்வேறு வகை உணவுகளைச் சாப்பிட்டாலும், தான் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உண்பதிலும் அதிக கவனம் செலுத்துபவர் ஷ்ருதி ஹாசன்.. சமீபத்தில் தான் கடந்த 5 ஆண்டுகளாக மது அருந்துவதில்லை என்பதைக் கூறியுள்ளார் ஷ்ருதி ஹாசன்.