தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக அறியப்படுபவர் நடிகை ஸ்ருதிஹாசன். சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வபோது பதிவிடும் புகைப்படங்கள் சில சமயங்களில் வினோதமாகவும் இருக்கும். இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் அதற்காக தான் எடுத்துக்கொள்ளும் சிகிச்சை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.


 


” கொரோனா ஊரடங்கு எல்லோர் வாழ்க்கையையும் போல எனது வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்களை தந்துவிட்டது. தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி , கெரியரிலும் சரி நான் யார் என்பதை இந்த கோரோனா ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்துதல்தான் உணர்த்தியது.குறிப்பாக எனது வளர்ச்சிக்கு இது உதவியாக இருந்தது என்பேன்.இந்த  ஊரடங்கால் உங்கள் மனநலம் எப்படியிருந்தது என கேட்டால் , நிச்சயம் மனநிலையில் மாற்றம் வரும் . ஆனல் கடந்த மூன்று வருடங்களாக மனநிலைக்கான சிகிச்சை எடுத்து வருகிறேன். எனக்கு முன்னதாகவே அலோசனை வழங்க மருத்துவர் இருக்கிறார் . கொரோனா சமயத்தில்  என்னால் யாரையும் சந்திக்க முடியவில்லை .நானும் எனது பூனை கிளாராவும் மட்டுமே நேரங்களை செலவிட்டோம். ஆனால் தனிமையாக இருப்பதை நான் முன்னதாகவே நேசிக்க ஆரமித்துவிட்டேன் அதனால் இந்த ஊரடங்கு எனக்கு பெரிதாக தெரியவில்லை.







 என் அப்பா அம்மா பிரிந்த பொழுது  முதன் முறையாக மனநல மருத்துவரை அனுகினேன். என்னதான் மனநல மருத்துவராக இருந்தாலும் அவருடன் நாம் நல்ல நட்புணர்வுடன் இல்லாவிட்டால் சில சமயங்களில் அவர் அளிக்கும் சிகிச்சை வேலை செய்யாது. பொதுவாகவே மருத்துவரை தேர்வு செய்யும் பொழுது அவர் உங்களுக்கு ஏற்றவராக இருக்குமாறு தேர்வு செய்ய வேண்டும். நான் பல்வேறு காரணங்களால் எனக்கான மருத்துவரை  இந்தியாவில் இல்லாமால் வெளிநாடுகளில் தேர்வு செய்தேன். குறிப்பாக அவர் பெண் மருத்துவராக இருக்க விரும்பினேன். மருத்துவர் நமது ரகசியங்களை பாதுகாக்க வேண்டும் அல்லவா !





மனநல மருத்துவரை அனுகுவது நம்மிடம் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதல்ல..நம்மை குறித்து நாம் அறிந்துக்கொள்ள அது  உதவியாக இருக்கும் . எனக்கு என் பதட்டத்தை குறைக்க மருத்தவர் உதவி ஒரு டூடாக இருந்தது.  என்னை நானே நேசிக்கவும் உதவியாக இருந்தது.25 வயது வரை பதட்டத்தால் நான் பேசுவதற்கே சிரமப்பட்டேன்.நான் என்ன நினைக்கிறேன் என்பதை மற்றவர்களிடம் கூறியதே கிடையாது. என் அப்பாவின் பெயர் எனது பின்னால் இருப்பதாலேயே என் சிறு வயதிலேயே நான் அதிக அழுத்தத்தை உணர்ந்தேன். ஆனால் இது குறித்து என் அப்பா அம்மாவிடம் நான் பேசவில்லை. எனக்கு தெரியும் அவர்களால்தான் எனக்கு இப்படியான அழுத்தம் என்று.





கடந்த 5 வருடங்களாக என் அப்பாவிடம் நான் வெளிப்படையாக பேச முடிகிறது. இரண்டு பெரியவர்கள் அமர்ந்து பேசுவது போன்ற உணர்வு கிடைக்கிறது. அவர் எனது விருப்பம், எனது வாழ்க்கை குறித்து தெரிந்துக்கொள்ள விரும்புவார்.  ஆனால் அம்மாவிடம் இன்னும் என்னால் பேச முடிவதில்லை. அப்பா எப்போதுமே எனக்காக இருப்பார். ” என மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் ஸ்ருதிஹாசன்.