Shruti Haasan: மதுவுக்கு அடிமையாகி இருந்தேன்.. ஸ்ருதி ஹாசன் ஸ்டேட்மெண்ட்டால் அதிர்ச்சி!

Shruti Haasan: “என் வாழ்வில் 8 ஆண்டுகள் மதுவுக்காக செலவழித்தேன். மதுவுக்கு அடிமையாகி இருந்தேன். அப்போது பார்ட்டிகளில் நான் நிதானமாக இருப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும்"

Continues below advertisement
Shruti Haasan: 8 ஆண்டுகளாக மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாக கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். 
 
கமல்ஹாசன் நடித்த 'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் பாடகியாக திரைக்கு வந்த ஸ்ருதிஹாசன், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த 7ஆம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஸ்ருதிஹாசன், தனுஷ் நடித்த 3 படத்திலும், சூர்யாவின் சிங்கம், விஷால் நடித்த பூஜை என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமானார். தொடர்ந்து தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார். 
 
கடைசியாக தெலுங்கில் வால்டர் வீரய்யா, வீரசிம்ஹா ரெட்டி படங்களில் நடித்த ஸ்ருதி ஹாசன், பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள சலார் படத்திலும் நடித்துள்ளார். அதில் பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ள நிலையில், வரும் 22ம் தேதி பான் இந்தியா படமாக இப்படம் திரைக்கு வருகிறது. இதுமட்டுமில்லாமல் ஹாலிவுட்டில் ‘தி ஐ’ என்ற படத்திலும் ஸ்ருதி தற்போது நடித்து வருகிறார். 
 
நடிப்பு மட்டுமில்லாமல் இசை, பாடல், நடனம் என ஆல்ரவுண்டராக வலம் வரும் ஸ்ருதிஹாசன் நேர்க்காணல் ஒன்றில் வெளிப்படையாக மனம் திறந்து பேசியுள்ளார். அதில், “என் வாழ்வில் 8 ஆண்டுகள் மதுவுக்காக செலவழித்தேன். மதுவுக்கு அடிமையாகி இருந்தேன். அப்போது பார்ட்டிகளில் நான் நிதானமாக இருப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். ஃபிரண்ட்ஸுடன் குடிப்பதை நான் விரும்பினேன். ஆனால், போதைப்பொருளை எப்போதும் பயன்படுத்தியது இல்லை. அந்த நாட்கள் மதுவுக்காகவே இருந்தன. 
 
பின்னர் அதிலிருந்து மீண்டு வந்துவிட்டேன். அந்த காலம் பற்றி இப்போது நான் வருத்தப்படவில்லை. அது எனது வாழ்க்கையின் ஒரு பகுதி. என்னை போல் பலரும் மதுவில் இருந்து மீண்டும் வந்துள்ளனர்” என பேசி அதிர்ச்சி அளித்துள்ளார். பிரபலமான நடிகையான ஸ்ருதிஹாசன் 8 ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையாக இருந்தேன் என பேசி இருப்பது அரவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 
 
சாந்தனு ஹசாரிகாவுடன் காதலில் இருக்கும் ஸ்ருதிஹாசன் சமீப காலமாக அவர் உடன் தான் இணைந்திருக்கும் படங்களைப் பகிர்ந்து தன் ரசிகர்களை மகிழ்வித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
Continues below advertisement
Sponsored Links by Taboola