Shruthi Narayanan: வீடியோ லீக்கிற்கு பிறகு.. ஸ்ருதி நாராயணன் ரிலீஸ் செய்த போட்டோ! ஏதும் சொன்னாரா?
Shruthi Narayanan: சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம் ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரல் ஆகியது.

’சிறகடிக்க ஆசை’ தொலைக்காட்சி தொடரின் பிரபலம் ஸ்ருதி நாராயணன் ஆபாச வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஸ்ருதி நாராயணன் சார்பில் பதில் எதிர்பார்த்து காத்திருக்கிறது இணைய உலகம். அப்படியிருக்க. ஸ்ருதி அவரது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பதிவிட்டதும் வைரலாகியது.
சிறகடிக்க ஆசை பிரபலம் - ஸ்ருதி நாராயணன்
Just In




தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் பேசுபொருளாவது வழக்கம்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர் சமூக வலைதளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. இதில் நடித்து வரும் ஸ்ருதி நாராயணனின்ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் பெண்கள் என்னெல்லாம் செய்ய வேண்டியிருப்பதை பற்றி திரைப்பிரபலங்கள் பேசி வருவது அதிகரித்துள்ளது. அப்படியிருக்கையில், சின்னத்திரை நடிகையின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. 2023, ஜனவரியில் தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி வித்யா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
'Casting Couch' விவகாரத்தில் வைரலான ஸ்ருதி நாராயணன் 24-வயதான தமிழ் நடிகை. சென்னையைச் சேர்ந்தவர் இவர். ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ‘சிறக்கடிக்க ஆசை’ தொடரில் வித்யா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். ஸ்ருதி நாராயணன் நடிப்பு மீது ஆர்வம் கொண்டவர். அதோடு, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். மாரி(2022), கார்த்திகை தீபம் (2022) ஆகிய சீரியல்களில் நடித்திருக்கிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 40 ஆயிரம் ஃபாளோயர்ஸ் இருக்கிறார்கள். வீடியோ விவகாரத்திற்கு பிறகு அவரது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை ப்ரைவேட் ஆக மாற்றியுள்ளார். ஸ்ருதி நாராயணன், சமந்தா உடன் Citadel: Honey Bunny (2024) வெப் சீரிஸில் Nanjamani கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
திரைத்துறையில் காலம் காலமாக காஸ்டிங் கவுச் இருந்து வருவது பற்றி பலர் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆடிஷனுக்காக எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் இது கூறப்படுகிறது. சம்பந்தபட்ட நடிகை இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
ஸ்ருதி நாராயணன் இன்ஸ்டாகிராம் போஸ்ட்
ஸ்ருதி நாராயணன், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நபர். வீடியோ வெளியான விவரகாத்திற்கு பிறகு, அவரது அக்கவுண்ட்டை 27.03.2025 அன்று மதியம் சிறிது நேரம் ப்ரைவேட் செய்தார். இப்போது, அவர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். சந்தன நிறத்தில் கோல்டன் பார்டர் சேலையில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களைப் போஸ்ட் செய்துள்ளார். அதோடு, இதே போன்ற புகைப்படங்களை ஒரு வாரத்திற்கு முன்பு, ஏற்கனவே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்துள்ள புகைப்படங்களுக்கு எந்தவித கேப்சனுமின்றி பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.