siragadikka aasai shruthi narayanan: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஸ்ருதி நாராயணன். இளம்பெண்ணான இவரது ஆடிஷன் வீடியோ என்ற பெயரில் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இது திரைத்துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது ஏஐ வீடியோ ஒன்று ஸ்ருதி நாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.
நான் வெரி ஓபன்:
இந்த நிலையில், ஸ்ருதி நாராயணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் தன்னுடைய குணாதிசயம் பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "எனக்கு ஸ்ட்ரெயிட் பார்வர்ட்டா பேசுறது வந்துடுச்சு. நான் மாத்தி சொல்றதால எதுவும் மாறப்போறது இல்லயே. நான் வெரி ஓபன்லி. வேலைனு வந்துட்டா அந்த வேலைக்கு நியாயமா இருக்கனும்.
என்னை சோம்பேறி வேணும்னா சொல்லுவேன். நான் செட்டுக்கு போறதே லேட். சில நேரம் ரொம்ப லேட்டா செட்டுக்கு போவேன். ரொம்ப பொறுமையா ரெடி ஆவேன். பொறுமையா சாப்பிடுவேன். அப்போ நான் ரொம்ப லேட்டா பண்றோமோ.. சீக்கிரமா பண்ணனுமோனு அந்த மாதிரி யோசிப்பேன்.
ரொம்ப வருத்தப்பட்ருப்பேன்:
பெரிய ஆக்டர்ஸ் ஆகிட்டா நான் சோலோ கேரக்டர்ல பண்ணனும்னு ஆசை. நான் லோ-வா ஃபீல் பண்ற டைம்ல ரெண்டு விஷயம் பண்ணுவேன். ஒன்னு படம், வெப்சீரிஸ் பாப்பேன். இல்லனா என் வண்டியை எடுத்துட்டு ரெய்டு போவேன். பக்கத்துல எங்கயாவது போயிட்டு உக்காந்துட்டு வர்றேன். நான் டிரைவ் பண்ணி போறது பிடிக்கும். எனக்கு வண்டி ஓட்றது ரொம்ப பிடிக்கும்.
ஒரு சின்ன விஷயத்தை பெருசாக்குனப்ப டவுன்-ஆ ஃபீல் பண்ணிருக்கேன். காலேஜ்ல, ஸ்கூல்ல டவுன் ஆகிருக்கேன். நம்ம ஆசைப்பட்டு ஒரு கேரக்டருக்கு ஆடிஷனுக்கு கொடுப்போம். அது வரும், வரும்னு பக்கத்துல வந்துட்டு வராம போயிடும். அப்படிலாம் வாய்ப்புகள் போயிருக்கு. டவுன் ஆகிருக்கேன்.
அழுதுருக்கேன். சிறகடிக்க ஆசை கிடைக்காம இருந்தா நான் ஃபீல் பண்ணிருப்பேன்.
கற்றுக்கொண்டது என்ன?
பெர்சனல் லைஃப்லயும் சேஞ்ச் பண்ணிருக்கு. தொழில் வாழ்க்கையிலயும் சேஞ்ச் பண்ணிருக்கு. அப்படிங்குறதால இது கிடைக்காம இருந்தா நான் கண்டிப்பா ஃபீல் பண்ணிருப்பேன்.
சிறகடிக்க ஆசை மூலமாக நல்ல ஆர்வமா இருக்கனும், நம்மளை நாமளே நல்லா புரிஞ்சுக்கனும், அக்கம்பக்கம் இருக்கவங்களை நல்லா கவனிக்கனும் நல்லா கத்துக்கிட்டேன்."
இவ்வாறு அவர் பேசினார்.