ஷ்ருதி ஹாசன் மற்றும் அவரது தந்தையான கமல்ஹாசன் ஆகிய இருவருக்குமான உறவு எப்போதும் ஸ்பெஷல் ஆனதுதான். இருவரும் சேர்ந்து குழந்தைகளைப் போல் மேடைகளில் ஆடுவது, சேர்ந்து பாடல் வரிகளை எழுதுவது என்று செம ஜாலியாக இருக்கும் தந்தை மகள் காம்போ இது. தற்போது இந்த தந்தை மகள் காம்போ இணையதளத்தில் மேலும் ஒரு சேட்டையான வீடியோவை வெளியிட்டிருக்கிறது.


தந்தையுடன் வைப் ஆகும் ஷ்ருதி ஹாசன்


கமல் நடித்து 1986 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படத்தின் பிஜிஎம் ஓடிக்கொண்டிருக்க அதற்கு தாளம் போட்டு வைப் செய்துகொண்டிருக்கிறார் ஷ்ருதி ஹாசன். சரியாக விக்ரம் என்கிற வார்த்தை வரும்போது திடீரென்று ஸ்க்ரீனில் எட்டிப்பார்க்கும் கமல் சர்ப்ரைஸ் கொடுக்கிறார். தந்தை மகள் இருவரும் சேர்ந்து வைப் ஆகும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.






கமல்ஹாசன்


கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் இயக்குநர் மனிரத்னத்தின் அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறார் கமல். இந்தியன் திரைப்படத்தின் அப்டேட் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஷ்ருதி ஹாசன்


ஷ்ருதி ஹாசன் நடிகையாக மட்டுமில்லாமல் ஒரு பாடகராகவும் அறியப்படுபவர். தனது சிறிய வயதில் இருந்தே இசையின் மீது அதீத ஆர்வம் கொண்டவர் ஷ்ருதி ஹாசன். அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது 20 வயதில் தான் எழுதி இசையமைத்த பாடல் ஒன்றை பாடி அந்த வீடியோவை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார் ஷ்ருதி ஹாசன்.  ’இந்தப் பாடலை  நான் என்னுடைய இருபதாவது வயதில் எழுதினேன். என்னுடைய வாழ்க்கையில் மிக சோகமான ஒரு காலகட்டம் அது என்பதால் இந்தப் பாடலை நான் யாரிடமும்  பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால் தற்போது எத்தனையோ ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் என்னுடைய ஒவ்வொரு சின்ன உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.” என பதிவிட்டார் ஷ்ருதி ஹாசன்.யாரும் எதிர்பாராதவிதமாக இந்த வீடீயோவிற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.


ஷ்ருதி ஹாசன் தற்போது பிரஷாந்த் நீல் இயக்கியிருக்கும் சலார் திரைபப்டத்தில் பிரபாஸுடன் இணைந்து நடித்துள்ளார்.