உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் மிகவும் பிஸியாக படங்களில் கவனம் செலுத்தி வரும் வேளையில் அவரின் திருமணம் குறித்த சில வதந்திகள் மிகவும் வேகமாக பரவி வருகிறது. அதற்கு தகுந்த பதிலடியை தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். 


ஸ்ருதியின் திரைப்பயணம் :


நடிகர் சூர்யா, அஜித், விஷால் என முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்துள்ள ஸ்ருதி ஹாசனுக்கு தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு திரையுலகம் பக்கம் திரும்பினார். அங்கு அவருக்கு நல்ல வாய்ப்புகள் தொடர்ச்சியாக கிடைத்து பிஸியாகி விட்டார். 


 



சலார் ஹீரோயின் :


தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வரும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'சலார்'. பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இப்படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார் ஸ்ருதி ஹாசன். அப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல ஒரு வரவேற்பைப் பெற்று கல்லா கட்டி வருகிறது. 


காதலனுடன் இருக்கும் ரிலேஷன்ஷிப் :


நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த பல மாதங்களாக தனது காதலன் சாந்தனு ஹசாரிகாவுடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார். அதை அவரே புகைப்படங்கள் மூலம் பல முறை வெளியுலகத்திற்கு தெரிவுபடுத்தியுள்ளனர். சோசியல் மீடியாவில் அடிக்கடி அவர்கள் இருவரும் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார். 


 



வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி :


இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் மற்றும் சாந்தனு ஹசாரிகா இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டுவிட்டனர் என்ற தகவல் இணையத்தில் மிகவும் வேகமாக பரவி வந்தது. அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.


"எனக்கு திருமணமாகவில்லை. அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளும் நான் ஏன் என்னுடைய திருமணத்தை ஏன் மறைக்க வேண்டும்? என்னைப் பற்றி தெரியாதவர்கள் தயவு செய்து அமைதி காக்கவும்..." என பதிலளித்துள்ளார். 


 






ஸ்ருதி ஹாசன் ஒரு முறை பத்திரிகை ஒன்றுக்கு பதிலளிக்கையில்  திருமணம் செய்து கொள்வதில் அவருக்கு இருக்கும் அச்சம் குறித்து மனம் திறந்து பேசியிருந்தார். “திருமணம் என்ற வார்த்தையே என்னை பயமுறுத்துகிறது. அதனால் அதை பற்றி நான் சிந்தித்து கூட பார்ப்பது கிடையாது. அவருடன் சேர்ந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.


நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நேரம் செலவிடுகிறோம், பல நல்ல காரியங்களை செய்கிறோம். திருமணம் செய்து கொள்வதை காட்டிலும் இது சிறந்ததாக உள்ளது அல்லவா? அப்படி இருக்கையில் திருமணம் குறித்து நான் ஏன் சிந்திக்க வேண்டும்?" என பதிலளித்து இருந்தார் ஸ்ருதி ஹாசன்.