நடிகை ஸ்ருதி ஹாசன் ப புகைப்படக்காரர் ஒருவரிடம் கடுமையாக நடந்துகொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது . பொதுவாக பத்திரிகையாளர்களிடம் பொறுமையாக நடந்துகொள்ளும் ஸ்ருதி ஹாசன் ஒரு நபரின் அநாகரீகமான செயலால்  அவர் அந்த பத்திரிகையாளருக்கு கடுமையாக பதிலடி கொடுத்தார். 

Continues below advertisement

சினிமா பிரபலங்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் இடையில் அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கமானதாகியுள்ளது. குறிப்பாக சினிமா பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் சினிமா பிரபலங்களிடம் பல நேரங்களில் அநாகரீகமான முறையில் பேசுவது அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நடிகை ஸ்ருதி ஹாசன் மும்பையில் இதே மாதிரியான ஏரிச்சலூட்டும் நிகழ்வு ஒன்றை எதிர்கொண்டுள்ளார். ரெஸ்டாரெண்ட் ஒன்றில் இருந்து வெளியே வந்த ஸ்ருதி ஹாசனை புகைப்படகாரர்கள் சூழந்தனர். அப்போது புகைப்படகாரர் ஒருவர் ஸ்ருதி ஹாசனை மம்மா (அம்மா) என அழைத்ததால் ஸ்ருதி ஹாசன் கோபப்பட்டார்

கடுப்பான ஸ்ருதி ஹாசன் 

இந்த வார்த்தையை கேட்ட ஸ்ருதி ஹாசன் உடனே "யார் உனக்கு அம்மா, என்ன உளறீங்க' என கடுமையாக பதிலளித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த விஷயத்தில்  ரசிகர்கள்  பலர் ஸ்ருதி ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்து அந்த பத்திரிகையாளரின் செயலை கண்டித்தும் பதிவிட்டு வருகிறார்கள். 

Continues below advertisement