எங்களை கூத்தாடி என்று சொல்லும் PTR பழனிவேல் தியாகராஜனின் பப்ளிசிட்டிக்கு ஒரு கூத்தாடி தானே தேவைப்படுகிறார்? ; எங்களை விமர்சிக்கு பிரகாஷ் ராஜ் தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் கூட பெற முடியவில்லை - குஷ்பூ.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்திருந்த பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பூ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...,"
குஷ்புவுக்கே சீட் கிடைக்காத போது, சுந்தர். சிக்கு எப்படி சீட் கிடைத்தது என அவர் சிந்தித்து பார்க்க வேண்டும் என்ற நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்துக்கு.
பிரகாஷ் ராஜ் என் நண்பர் தான். அவர் PTR உடன் என்னை ஒப்பிட்டு பேசியுள்ளார். திமுகவில் இருக்கும் செந்தில் பாலாஜி, சேகர் பாபு திமுகவிலேயே பிறந்து வளர்ந்தவர்களா? கர்நாடகாவில் பிரகாஷ் ராஜ் தேர்தலில் போட்டியிட்டு நின்று டெபாசிட் கூட வாங்காமல் தோற்றுப் போனார். நேரமிருந்தால் அவரை சிந்தித்து பார்க்கச் சொல்லுங்கள்.
PTR விமர்சனம் செய்வது குறித்த கேள்விக்கு
எங்களை கூத்தாடி என்று சொல்லும் PTR பழனிவேல் தியாகராஜனின் பப்ளிசிட்டிக்கு ஒரு கூத்தாடி தானே தேவைப்படுகிறார்? PTR தன் படிப்பை காட்டுகிறார், நாங்கள் என் வளர்ப்பை காட்டுகிறோம். நாங்கள் பரம்பரையாக அரசியல் செய்துகொண்டு மக்களை சந்திக்கவில்லை. எங்களை அடையாளப்படுத்தி தான் அரசியல் செய்து வருகிறோம். நாங்கள் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி பல பேரை படிக்க வைத்துள்ளோம். சுந்தர்.சி Cheap பப்ளிசிட்டி செய்பவர் கிடையாது.
கடந்த 2023 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையரை மசோதாவை ஏன் தாக்கல் செய்யவில்லை என்ற ராகுல் காந்தியின் கருத்துக்கு
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏன் மசோதாவை தாக்கல் செய்யவில்லை? பெண்களின் முதுகில் குத்துவதற்கு பதிலாக நெஞ்சில் குத்தியுள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுக்காமல் எப்படி மசோதாவை தாக்கல் செய்ய இயலும்? ராகுல் காந்தி, திமுக வினர் படித்தும் முட்டாளாக இருக்கிறார்கள். மக்களை ஏமாற்றும் வேலையை செய்து" வருகிறார்கள்.
