தொழிலபதிபரை மணந்து பார்சிலோனாவில் செட்டில் ஆன நடிகை ஸ்ரேயா, கடந்த அக்டோபர் மாதம் இந்திய சினிமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் தனக்கு கடந்த வருடமே குழந்தை பிறந்துவிட்டதாகவும், குழந்தை பிறந்து 9 மாதமாகிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்
இந்த தகவல் ரசிகர்கள், சினிமாத்துறையினர் இடையே இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது. இவ்வளவு பெரிய ரகசியத்தை இப்படி மறைத்துவிட்டாரே என அனைவருமே ஸ்ரேயா மீது செல்லமாக கோபப்பட்டனர்.
இந்நிலையில் தன்னுடைய குழந்தை ராதாவின் முதல் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதாக நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் ஸ்ரேயா. இது குறித்து வீடியோ ஒன்றையும் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்ரேயா. அவரது பதிவில், அவள் இன்று ஒரு வயதை எட்டுகிறாள். கடந்த வருடம் 7.40 க்கு அவள் பிறந்தாள். அவளுக்கு என்றுமே எங்கள் அன்பு உண்டு. மேலும் தன்னுடைய தாய், தந்தை, நண்பர்களுக்கும் அவர் நன்றியை தெரிவித்துள்ளார்.
முன்னதாக தன் குழந்தை குறித்து பேசிய அவர், "என்னுடைய மகளின் பெயர் ராதா. நான் இனிமேலும் அவள் குறித்து ரகசியம் காக்க எதுவுமே இல்லை. அவள் ஏற்கெனவே பல நாடுகள் சுற்றிவிட்டாள். அவள் ஒரு ட்ராவல் பேபி தான். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு குழந்தை தாயைப் பெற்றெடுத்தது போல. ராதா என் சிறந்த தோழி எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த லாக்டவுனில் பார்சிலோனாவில் ராதா பிறந்துள்ளார். திட்டமிட்டு பிறந்த குழந்தைதான் ராதா. இதுதான் ஒரு குடும்பத்தை தொடங்குவதற்கான நேரமென திட்டமிட்டு முடிவெடுத்தோம். இது அழகான சுகப்பிரவசமாகவே இருந்தது" என்றார்.