தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30ஆவது சிவத்தலமாகும். மருத மரத்தைத் தல மரமாகக் கொண்டு சிறப்புற விளங்குகின்ற சிவன் கோயில்கள் இந்தியாவில் மூன்று. முதலாவது ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே உள்ள மல்லிகார்ஜுனம் எனும் திருக்கோயில். இரண்டாவது மத்தியார்ஜுனம் எனப்படுகின்ற தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர். மூன்றாவது புடார்சுனம் எனப்படுகின்ற தமிழ்நாடு திருநெல்வேலிக்கு அருகே அம்பாசமுத்திரம் அருகில் உள்ள திருப்புடைமருதூர்.




வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது. சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான்.


அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான்.




இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலில்  திருவாடுதுறை ஆதீனத்தை சொந்தமானதாகும். இந்த கோயிலில் தைப்பூசத் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும் வழக்கம்.  இந்த ஆண்டு தைப்பூசத் பெருவிழாவை முன்னிட்டு  ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோவில்கொடியேற்றும் திருவிழா நடைபெற்றது


இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக,  சூரிய பிரபை சந்திர பிரபை வாகனங்களில் ஸ்ரீ மகாலிங்க சுவாமி காட்சியளிக்கிறார் மூன்றாம் நிகழ்ச்சியாக பூதம் பூதகி வாகனங்களிலும்நான்காம் நாள் யானை சிம்ம வாகனத்தில் காட்சியளிக்கிறார். ஐந்தாம் திருநாள் இரவு 10 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் காட்சி அளிக்கிறார் ஆறாம் நாள் நிகழ்ச்சியாக காமதேனு கற்பக விருட்சம் வாகனங்களில் காட்சி அளிக்கிறார். ஏழாம் நாள் திருவிழா காலை பல்லக்கிலும் இரவு கயிலாய வாகனம், அன்னபட்சிவாகனங்களில் மகாலிங்க சுவாமி காட்சி அளிக்கிறார். எட்டாம் திருநாள் காலை பல்லக்கிலும் இரவு குதிரை, கிளி வாகனங்களில் மகாலிங்க சுவாமி காட்சியளிக்கிறார் ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு திருத்தேரோட்டம் அதிகாலை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து பத்து நாள் திருவிழாவாக தைப்பூச தீர்த்தவாரி காலை பதினொரு மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில்காவிரி ஆற்றில் மதியம் எழுந்தருளி   தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது அன்று இரவு வெள்ளி ரதக் காட்சி நடைபெறுகிறது தைப்பூசவிழா ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.