சோசியல் மீடியாவில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் நடிகை ஸ்ரேயா சரண் போஸ்ட் ஒன்றுக்கு எல்லையை மீறி கமெண்ட் போட்ட ரசிகர் ஒருவருக்கு தகுந்த பதிலடியை கொடுத்து பாராட்டுகளை குவித்த ஷ்ரேயாவின் கணவரின் முந்தைய வீடியோ ஒன்று தற்போது ட்ரெண்டிங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 


வெள்ளித்திரை அறிமுகம் :


தெலுங்கு திரையுலகில் 2001ம் ஆண்டு வெளியான 'இஷ்டம்' திரைப்படம்  மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. தமிழ்  திரைப்படத்தில் அவர் முதலில் முகம் காட்டியது 2003ம் ஆண்டு திரிஷா ஹீரோயினாக நடித்த எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தில். ஹீரோவின் தோழியாக அப்படத்தில் அறிமுகமான ஸ்ரேயா தமிழில் ஹீரோயினாக நடித்த முதல் படம் 'மழை'. 


 



பான் இந்திய நடிகை :


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ஒரு பான் இந்திய நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா. ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக அனைவரின் தூக்கத்தையும் கெடுத்த ஸ்ரேயா திருமணமாகி குழந்தைக்கு தாயான பின்னர் இன்றும் அதே கிளாமருடன் கலக்கி வருகிறார். விஜய், தனுஷ், ஜெயம் ரவி, விக்ரம், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து டூயட் பாடியுள்ளார். சிவாஜி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.


கிளாமர் குறையாத ஸ்ரேயா :


முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா கடந்த ஆண்டு 2018ம் ஆண்டு வெளிநாட்டை சேர்ந்த ஆண்ட்ரூ கொஸ்சீவ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த ஆண்டு வெளியான எஸ்.எஸ். ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் மற்றும் த்ரிஷ்யம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். விரைவில் கன்னடத்தில் ஸ்ரேயா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கப்ஜா திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக மஞ்சள் நிற புடவையில் மிகவும் கிளாமரான ஒரு புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ளார். இந்த போஸ்டுக்கு லைக்ஸ்கள் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் ஸ்ரேயாவின் பழைய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. 


 






வைரலாகும் த்ரோ பேக் வீடியோ :


அந்த த்ரோ பேக் வீடியோவில் ரசிகர் ஒருவர் எல்லையை மீறி உங்கள் மார்பகங்கள் மிகவும் சூப்பராக இருக்கிறது என கமெண்ட் செய்தார். அருகில் இருந்த ஷ்ரேயாவின் கணவர் அதற்கு "ஐ அக்ரீ வித் யூ கைஸ்" என மிகவும் கூலாக பதிலளித்தார். மனைவியை பற்றி ஒருவர் ஆபாசமாக கமெண்ட் செய்ததற்கு எந்த ஒரு கடுப்பான ரியாக்ஷனும் கொடுக்காமல் மிகவும் கூலாக அவர் கொடுத்த பதிலை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெளிநாட்டை சேர்ந்தவர் என்பதால் பரந்த மனதுடன் இந்த கமெண்டை ஏற்றுக்கொண்டார். இதுவே நம்ம நாட்டை சேர்ந்தவர் என்றால் கணவர் ரியாக்ஷன் எப்படி இருந்து இருக்கும் பாருங்கள்.