சோஷியல் மீடியா பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்திய பயனாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது இன்ஸ்டாகிராம் செயலி. இன்ஸ்டாகிராம் பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு பிரபலமாக இருக்கும் இந்த செயலியின் பயனாளர்களாக இருக்கும் பிரபலங்களை மில்லியன் கணக்கான ஃபாலோவர்கள் பின்தொடர்கிறார்கள்.



 


அந்த வரிசையில் அதிகமான ஃபாலோவர்களை கொண்டவர்களை பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பிரியங்கா சோப்ரா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. முதல் இடத்தில் இருக்கும் விராட் கோலியை 271 மில்லயன் ஃபாலோவர்களும், இரண்டாவது இடத்தில் இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவை 91.8 மில்லியன் ஃபாலோவர்களும் பின்தொடர்கிறார்கள். 91.3  ஃபாலோவர்களை பெற்று மூன்றாவது இடத்தில் இருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. 


இந்நிலையில் பிரதமர் மோடியை முந்தி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் நடிகை ஷ்ரத்தா கபூர். புதன்கிழமையின் நிலவரப்படி 91.4 ஃபாலோவர்களை பெற்று மூன்றாவது இடத்துக்கு முன்னேறி நரேந்திர மோடியை முந்திவிட்டார். அடுத்தடுத்த இடங்களில் பாலிவுட் நடிகைகள் ஆலியா பட், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். 


இயக்குநர் அமர் கௌசிக் இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், அபிஷேக் பானர்ஜி,   பங்கஜ் திரிபாதி, அபர்சக்தி குர்ஹானா, ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோரின் நடிப்பில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான திரைப்படம் 'ஸ்ட்ரீ 2'.  கடந்த 2018ம் ஆண்டு வெளியான 'ஸ்ட்ரீ' படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் வெளியானது. மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள 'ஸ்ட்ரீ 2' வெளியான ஆறே நாளில் 245 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பாலிவுட்டில் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 



 


ஆனால் எக்ஸ் தளத்தை பொறுத்தவரையில் உலகளவில் அதிக அளவிலான ஃபாலோவர்களை பெற்றுள்ள தலைவராக நரேந்திர மோடி விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 101.2 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்கள் பின்தொடர்கிறார்கள். இவரை விடவும் உலக தலைவர்களான ஜோ பைடன், ஷேக் முகமது, போப் பிரான்சிஸ் உள்ளிட்டோர் எண்ணிக்கையில் சிறிது குறைவான ஃபாலோவர்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.