நடிகர் கார்த்தி நடிப்பில் 2011 ஆம் ஆண்டு திரைக்கு வந்த 'சிறுத்தை' படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படம் கொடுத்த வரவேற்புக்கு பிறகு வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என்று தொடர்ச்சியாக அஜித்தை வைத்து எல்லா படங்களையும் ஹிட் கொடுத்தார். இதில் விவேகம் படம் தான் கலவையான விமர்சனம் பெற்றது. மற்ற படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. 

Continues below advertisement

இப்படி அஜித் வைத்து எல்லா படங்களையும் ஹிட் கொடுத்த இயக்குநர் சிவா அடுத்து ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கினார். ஆனால், இந்தப் படம் பெரியளவில் ரீச் கொடுக்கவில்லை. 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சூர்யாவின் கங்குவா படத்தை இயக்கினார்.

இந்தப் படம் வெளியானது முதல் நாளே எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில் பாக்ஸ் ஆபிஸிலும் படத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது. கங்குவா படத்திற்கு பிறகு அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், அஜித் அதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இப்போது எந்த நடிகரும் வாய்ப்பு கொடுக்காத நிலையில் சினிமாவிலிருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Continues below advertisement

சென்னையில் உள்ள தனது அலுவலகத்தை காலி செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அஜித் தான் அவருக்கு 4 படங்கள் வாய்ப்பு கொடுத்தார். இதில் எல்லா படங்களும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றாலும் விவேகம் படம் மட்டுமே கலவையான விமர்சனத்தை எதிர்கொண்டது. அண்ணாத்த மற்றும் கங்குவா வாங்கிய அடியின் காரணமாக அவர் இப்போது சினிமாவிலிருந்து விலகுகிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் வதந்தியாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம் என நெருங்கிய சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். காரணம் தன்னுடைய அடுத்த படத்தை கார்த்தியை வைத்து இயக்க தான் சிவா பிளான் போட்டுள்ளதாகவும், இந்த படத்தை 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.