நடிகர் விஜயின் பீஸ்ட் படம் வரும் 13-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு ரசிகர்கள் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த வரிசையில் நடிகை ஷிவானியும் தற்போது ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.






தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வெளியாக உள்ளது.


 






படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் ஒரு பகுதியாக, முதல் பாடல் கடந்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது.சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதி அனிருத் இசையமைத்துள்ள அரபிக்குத்து பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்து இருக்கிறது. அதனைத்தொடர்ந்து இந்தப்படத்தின் ட்ரெய்லரும் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது