சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்ற ஒரு நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி. கடந்த மூன்று சீசன்களாக வெற்றிபெற்ற இந்த காமெடி கலந்த குக்கிங் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி  வருகிறது. சனி மற்றும் ஞாயிறு இரவு ஒளிபரப்பாகி வருகிறது. 


விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கடந்த மூன்று சீசன்களில் கலக்கிய ஷிவாங்கிக்கு ஏராளமான ரசிகர்கள் உலகெங்கிலும் உள்ளனர். கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த சீசனில் குக்காக புரொமோஷன் பெற்று கலக்கலாக  சமைத்து நடுவர்களிடம் பாராட்டைப் பெற்று வந்தார். மேலும் ஒரு சில எபிசோடுகளில் இம்யூனிட்டி கூட வென்று பூஸ்ட்டரையும் கைப்பற்றியுள்ளார்.   



அந்த வகையில் இந்த வாரம் ஒளிபரப்பான எபிசோட்டில் ஒரு சர்ப்ரைஸ் எலிமெண்ட்டாக முந்தைய மூன்று சீசன்களில் இருந்து ரேகா, ஷகிலா மற்றும் ரோஷினி உள்ளிட்ட குக்குகளும், சரத், பார்த்த ஆகிய கோமாளிகளும் வந்திருந்தனர். இந்த வாரம் அட்வான்டேஜ் டாஸ்க் நடைபெற்றதில் ரோஷிணியும் குரேஷியும் டாஸ்க் வென்றனர். அதை அடுத்து நடைபெற்ற இம்யூனிட்டி டாஸ்கில் நன்றாக சமைத்து அதிக மதிப்பெண்களை பெற்ற முதல் நான்கு போட்டியாளர்களான விசித்திரா, ஷகிலா, ஷிவாங்கி மற்றும் ஷெரின் இம்யூனிட்டி பெற்றனர்.  


ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு பொருளை தேர்ந்து எடுத்தனர். ஆனால் அவற்றை குலுக்கல் முறையில் மற்ற போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது. அப்படி நடைபெற்ற ஒரு ட்விஸ்டில் பாகற்காய் வேண்டாம் என்ன முதலில் இருந்தே புலம்பி வந்த ஷிவாங்கிக்கு பாகற்காயே கிடைத்தது. மிகவும் வருத்தத்தில் இருந்த ஷிவாங்கி தனக்கு பாகற்காய் வேண்டாம் அதனால் நான் இந்த இம்யூனிட்டி டாஸ்கில் இருந்து விலகி கொள்கிறேன் என நடுவர்களிடம் கூற  அவர்கள் கோபமடைந்துள்ளனர். இந்த சீசன் தொடங்கி 15 வாரத்திற்கு மேல் முடிந்துவிட்டது. இனிமேல் நீ சமைக்க முடியாது என்று சொல்ல முடியாது. எனவே நீ பாகற்காயை வைத்து சமைத்துத்தான் ஆகவேண்டும் என்ன கூறியுள்ளனர். 



இதனால் அந்த எபிசோட் முழுவதும் மிகவும் வருத்தத்துடன் இருந்தார் ஷிவாங்கி. இருப்பினும் நன்றாக சமைத்து நடுவர்களின் பாராட்டை பெற்றார். முன்னர் ஒரு எபிசோடில் ஷிவாங்கிக்கு பாகற்காய் வந்தபோது அவர் சொதப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷிவங்கியை விடாமல் துரத்தும் பாகற்காய் என ஒரு சிலர் கிண்டல் செய்து வந்தாலும், வாடிய முகத்துடன் ஷிவாங்கியை பார்த்த அவரது ரசிகர்களும் வருத்தம் அடைந்துள்ளனர்.