விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள பில்லூர் கிராமத்தில் வயதான தம்பதியை பேரனே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் அருகேயுள்ள பில்லூர் கிராமத்தில் வயதான தம்பதிகளான கலுவு ஆறுமுகம் அவரது மனைவி மணி கலுவு ஆகிய இருவரும் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் மாலையில் மது போதையில் இருந்த வயதான தம்பதியின் பேரனான அருள் சக்தி என்ற இளைஞர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்த வயதான தம்பதியினரை குளிர்பானம் அருந்தக்கோரி வற்புறுத்தி இளைஞர் சண்டையிட்டுள்ளனர். அதன்பின்பு அங்கிருந்து பேரன் அருள் சக்தி இரவு 8.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.


அதன் பின்பு இரவு 9.30 மணியளவில் அருள் சக்தியின் தகப்பனார் முருகன் வயதான தம்பதியின் வீட்டின் அருகே வசிப்பவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது தந்தையும் தாயும் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அருகில் வசிப்பவர்கள் இரவு வீட்டிற்கு சென்று பார்த்தபோது வயதான இருவரும் வாயில் நுரையுடன் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்த இருவரின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


வயதான தம்பதியை குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டுள்ளனரா அல்லது தலையானியை வைத்து மூச்சி அடைத்து கொலை செய்துள்ளனரா என்ற கோணங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர். போலீசார் விசாரனையில் அருள் சக்தி வயதான தம்பதியினரை கொலை செய்துவிட்டு தந்தையான முருகனிடம் மது போதையில் உனது தாயையும் தந்தையையும் கொலை செய்துவிட்டதாகவும் உன்னையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரனை செய்து வருகிற நிலையில் அருள் சக்தி தனது மொபைல் என்னை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளதால் அருள் சக்தியை போலீசார் தேடிவருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண