Shilpa Shetty: “வெறுப்பதற்கு ஆட்கள் தேவை” ... வைரலாகும் ஷில்பா ஷெட்டியின் கணவர் ட்வீட்

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா நேற்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார்.

Continues below advertisement

ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Continues below advertisement

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா நேற்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார். பிரிட்டனைச் சேர்ந்த ராஜ் குந்த்ரா கடந்தாண்டு முன்பு ஆபாசப் படங்கள் எடுத்து  மொபைல் செயலிகளில் பதிவேற்றம் செய்ததாக கடந்தாண்டு மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து 2 மாதங்களுக்கு  அவர் பல முயற்சிகளை மேற்கொண்டு ஜாமீன் பெற்றார். 

இந்த வழக்கில் பல விமர்சனங்களையும் சந்தித்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே செல்லும் போதெல்லாம் மாறுவேடத்தில் ராஜ் குந்த்ரா சென்று வந்தார். இதனை பலரும் இணையத்தில் கிண்டலடித்தனர். மேலும் இந்த காரணத்திற்காக அவர் நீண்ட காலமாக சமூக ஊடகங்களில் இருந்தும் விலகி இருந்தார். இதனிடையே நேற்று தனது பிறந்தநாளையொட்டி மீண்டும்சமூக ஊடகங்களில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து ராஜ் குந்த்ரா வெளியிட்டுள்ள பதிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதில் முன்பக்கத்தில் பல இடி சின்னங்களைக் கொண்ட கருப்பு ஹூடி அணிந்திருப்பதை போன்ற புகைப்படத்தை பதிவிட்டு "எனக்கு புதிய வெறுப்பாளர்கள் தேவை, ஏனென்றால் பழையவர்கள் என்னை விரும்பத் தொடங்கிவிட்டனர்"  என தெரிவித்துள்ளார். இதனைக் கண்ட இணையவாசிகள் அவரை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். அதில் மறைக்க வேண்டிய விஷயங்களை ஏன் செய்ய வேண்டும் என்றும், மற்றொருவர் அவர்கள் உங்களைப் பொறுத்துக்கொள்கிறார்கள். நாங்கள் அப்படியல்ல என தெரிவித்துள்ளார்.

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola