ஷில்பா ஷெட்டி:


டீன் ஏஜ் பருவத்திலேயே பாலிவுட்டிற்குள் நுழைந்தவர் ஷில்பா ஷெட்டி. தனது 15வது வயதில் ‘லிம்கா’ கமர்ஷியலில் தோன்றிய இவர், இதன் மூலம் டி.வி பார்ப்பவர்களின் மனதில் தனது முகத்தை பதிய வைத்துவிட்டார். பின்னர், மெல்ல மெல்ல ஹிந்தி திரையிலகிலும் பிரவேசித்து, பிரபல நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான் உள்ளிட்டோருடனும் நடித்துவிட்டார். 2000-ஆம் ஆண்டு வெளியான குஷி திரைப்படத்தில் தளபதி விஜய்யுடன், “மேக்கோரீனா” பாடலுக்கு நடனமாடி கோலிவுட் ரசிகர்களின் இதையத்தை கொய்தவர் ஷில்பா!


பாலிவுட்டின் முன்னனி நடிகை என்பதைத் தாண்டி, ஷில்பாவிற்கென சில தனித்தன்மைகள் உண்டு. கடந்த 23 ஆண்டுகளாக பாலிவுட்டில் இருக்கும் இவர் சிறந்த உடற்பயிற்சியாளர். இவரது ஹாபியே, யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வது தானாம்!






2009ஆம் ஆண்டு ராஜ் குந்தரா என்ற தொழிலதிபரை கரம் பிடித்தார் ஷில்பா ஷெட்டி. இவர்களுக்கு வியான், சமீஷா என இரு பிள்ளைகள் உண்டு. ஒரு பக்கம் நடிப்பு, இன்னொரு மாடலிங் என பிசியாக இருக்கும் இவர், தனது கணவருடன் சேர்ந்து சொந்தமாக பல தொழில்களையும் செய்து வருகிறார்.  


10 வயதிலேயே தொழிலதிபரா?


ஷில்பா ஷெட்டியின் மகன் வியான் குந்தரா தனது அம்மாவை போலவே தானும் தொழிலதிபர் ஆகும் முயற்சியில் இறங்கியுள்ளார் போலும். இவர், தற்போது தனது சொந்த முயற்சியால்  ஸ்னீக்கர்ஸ் எனப்படும் ‘ஷூ’ வகைகள், துணிகள் மற்றும் பேக்ஸ் ஆகியவற்றை தயாரித்து குட்டி தொழிலதிபராக உருவாகியுள்ளார். இதற்கு VRKICKSS எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதல் முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள ஷூக்களின் ஆரம்ப விலை 4,999. தனது தயாரிப்பில் முதன் முதலில் உருவாகியுள்ள  ‘கஸ்டமைஸ்ட் ஸ்னீக்கர்ஸ் ஷூ’ செட்டை தனது அம்மாவிற்க்கு கொடுத்து அசத்தியுள்ளார் வியான்!


 






வியான் தனது உருவாக்கமான ஸ்னீக்கர்ஸ் குறித்து பேசும் வீடியோ பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ஷில்பா ஷெட்டி. வியானின், VRKICKSS குறித்து குறிப்பிட்டுள்ள அவர், இதனால் தான் பெருமை கொள்வதாகவும், தொழில் தொடங்கும் நோக்கத்துடன் செயல்படும் குழந்தைகளை, பெற்றோர்கள் இவ்வாறு ஊக்குவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 


இதைப்பார்த்த அனைவரும், “இந்த வயசுல இவ்ளோ பெரிய பிஸ்னஸா..வாழ்த்துகள் குட்டி பய்யா..” என கமெண்ட் செய்து வருகின்றனர்.  மேலும், தனது பதிவில் வியான் குறித்து மிகவும் பெருமை கொள்வதாக குறிப்பிட்டுள்ளார் ஷில்பா ஷெட்டி. இதையடுத்து குட்டி வியானிற்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.