Shreya Anchan : கேண்டில் லைட் டின்னர்.. மாலத்தீவு.. சித்துவுக்கு பர்த்டே சர்ப்ரைஸ் கொடுத்த ஷ்ரேயா அஞ்சன்

சித்துவின் பிறந்தநாளுக்கு மாலத்தீவு கடற்கரையில் கேண்டில் லைட் டின்னர் ஏற்பாடு செய்து அசத்தியுள்ளார் ஸ்ரேயா.

Continues below advertisement

பிறந்தநாள் கொண்டாட்டத்தை மிகவும் ஸ்பெஷலாக ஏற்பாடு செய்து கணவரை அசத்தியுள்ளார் ஸ்ரேயா அஞ்சன். இந்த சர்ப்ரைஸ் கொண்டாட்டத்தின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துள்ளார் நடிகர் சித்து.

Continues below advertisement

 


கலர்ஸ் தொலைக்காட்சியில் 2018ம் ஆண்டு ஒளிபரப்பான "திருமணம்" சீரியல் மூலம் மிகவும் பிரபலமான ஜோடி சித்தார்த் - ஸ்ரேயா. இவர்கள் சின்னத்திரை பிரியர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள். அந்த தொடரில் நடித்த இவர்களின் ஜோடி ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. அந்த சமயத்தில் இருந்து இவர்களுக்கென்று ஏராளமான ரசிகர் கூட்டம் உள்ளது. அந்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் இடையில் மலர்ந்த காதல் இனிதே திருமணத்தில் முடிந்தது. திருமணம் முடிந்த பிறகு முதல் முறையாக சித்துவின் பிறந்த நாள் வருவதால் அதை வெகு சிறப்பாக மறக்க முடியாத தருணமாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் பல சர்பரைஸ்களை ஏற்பாடு செய்து சிந்துவை திக்குமுக்காட வைத்து விட்டார் ஸ்ரேயா. 

 

 

தற்போது விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலின் கதாநாயகனாக வெகு சிறப்பாக நடித்து வருகிறார் நடிகர் சித்து. மேலும் அவர் கூடிய விரைவில் வெள்ளித்திரையிலும் அடியெடுத்து வைக்க உள்ளார் என சில தகவல்கள் கூறுகின்றன. ஸ்ரேயா அஞ்சன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரஜினி எனும் சீரியலின் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் சோசியல் மீடியாவில் மிகவும்  ஆக்டிவான ஜோடிகள். அவ்வப்போது இருவரும் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் வீடியோவையும் பகிர்ந்துள்ளார் சித்து. இது  ரசிகர்களின் லைக்ஸ்களை குவித்து வருகிறது. 


சில தினங்களுக்கு முன்னர் முடிந்த சித்துவின் பிறந்தநாளுக்கு மாலத்தீவு கடற்கரையில் கேண்டில் லைட் டின்னர் ஏற்பாடு செய்து அசத்தியுள்ளார் ஸ்ரேயா. மேலும் பிறந்தநாள் கிஃப்ட்டாக ஒரு ஐபோன் கொடுத்துள்ளார். இந்த அழகான தருணத்தை வீடியோவுடன் ரசிகர்களுக்கு பகிர்ந்து ஸ்ரேயாவுக்கு தனது காதலையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார் சித்து.   

Continues below advertisement
Sponsored Links by Taboola