வடமாநிலங்களில் களைக்கட்டிய ஹோலி பண்டிகைக்கு நடுவே டிவி சீரியல் நடிகையும்,  அவரது கணவரும் ரசிகர்கள் முன்னாள் லிப் கிஸ் கொடுத்த வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில்  வைரலாக பரவி வருகிறது. shefali jariwala


குளிர்காலத்திற்கு குட்பை சொல்லிவிட்டு கோடை காலத்தை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை வடமாநிலங்களில் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்தியாவில் உள்ள மதங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் போல ஹோலிக்கும் கலாச்சார பின்னணி உண்டு. அதாவது ஹோலி பண்டிகைக்கு முதல் நாள் மக்கள் அனைவரும் பொது இடங்களில் ஒன்று கூடி ஹோலிகா என்ற பெயரில் சிறப்பு பூஜை செய்வார்கள். 


அதன்பிறகு சிவப்பு, ஆரஞ்சு , மஞ்சள் , பிங்க் , பச்சை  ஆகிய நிறங்களிலான கலர்ப்பொடிகளை தூவி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும்,ஹோலி பண்டிகையில் நீல நிறத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. காரணம் அது கிருஷ்ணரின் நிறத்தை குறிப்பதாக உள்ளது. 


இதனிடையே வடமாநிலங்களில் இன்று (மார்ச் 8) ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நேற்றே அதற்கான கொண்டாட்டங்கள் களைக்கட்ட தொடங்கியது. கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா போன்ற புதுமண ஜோடிகள் தொடங்கி பாலிவுட் நட்சத்திரங்கள் அனைவரும் வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவியும், முகத்தில் பூசியும் மகிழ்ந்தனர். இதுதொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் நடிகை ஷெஃபாலி ஜரிவாலா மற்றும் அவரது கணவர் பராக் தியாகி ரசிகர்கள் முன்னிலையில் தங்கள் அன்பை வெளிப்படுத்தி கொண்ட நிகழ்வு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மாயாநகரியில் நடந்த சின்னத்திரை நடிகர்-நடிகைகளின் ஹோலி கொண்டாட்டத்தில் இருவரும் பங்கேற்றனர். அவர்கள் அங்கிருந்த ஊடகங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோரை கண்டுக்கொள்ளாமல் தங்கள் மகிழ்ச்சியான மனநிலையை முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.  ஆனால் வழக்கம்போல இதற்கு சிலர் எதிர்ப்புக் குரலும் எழுப்பி வருகின்றனர்.