ஓஹோ என வாழ்ந்த பின்னர் வாழ்க்கையின் அடிமட்டத்திற்கு சென்ற போதிலும் தன்னுடைய அயராத உழைப்பாலும் விடாமுயற்சியாலும் முன்னேறி வெற்றி படியை ஏற்றியவர் நடிகை சாந்தி வில்லியம்ஸ். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சாந்தி வில்லியம்ஸ் தன்னுடைய திரைப்பயணம், திருமண வாழ்க்கை மற்றும் பல அனுபவங்களை மிகவும் வெளிப்படையாக பகிர்ந்து இருந்தார். 


ஏராளமான சீரியல்கள், திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்கள், குணச்சித்திர கதாபாத்திரங்கள் என ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் சாந்தி வில்லியம்ஸ். அதிலும் குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான 'மெட்டி ஒலி' சீரியலில் அவரின் நடிப்பு இன்றும் ரசிகர்களின்  நினைவுகளை விட்டு நீங்கவில்லை. 


 



எத்தனை உயரங்களை எட்டினாலும் மிகவும் தன் அடக்கமானவர் சாந்தி வில்லியம்ஸ். அவர் நடிகர் விஜய்யுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து பகிர்ந்து இருந்தார்.  கேரளாவில் ஷூட்டிங்கில் இருந்தேன். 'திருமலை' படத்தின் ஷூட்டிங்கிற்காக வரச்சொல்லி பாலச்சந்தர் சார் சொன்னார். அடிச்சு புடிச்சு பிளைட் டிக்கெட் போட்டு சென்னைக்கு வந்தேன். சென்னை சாலிகிராமத்தில் போடப்பட்டு இருந்த செட்டுக்கு வந்து காத்திருந்தேன். விஜய்க்காக தனியா ஒரு ரூம் மாதிரி செட் போட்டு இருந்தாங்க. நான் காத்துகிட்டு இருப்பதை பார்த்த விஜய் மேக்கப் மேன் இடம் சொல்லி "அம்மா அங்கே கொசுக்கடியில உட்கார்ந்து கிட்டு இருக்காங்க. அவங்களை  என்னோட ரூம்ல போய் உட்கார சொல்லுங்க" அப்படினு சொல்லி அனுப்பினார்.


"வேண்டாங்க... அவர் பாவம் ஷாட் முடிஞ்சதும் ரூம்ல போய் ரெஸ்ட் எடுப்பார். எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல. நான் இங்கேயே உட்கார்ந்துக்குறேன்" அப்படினு சொல்லிட்டு ஒரு ஓரமா போய் உட்கார்ந்துக்கிட்டேன். அசதியில் நான் அங்க இருந்த பெஞ்சுல படுத்துகிட்டு இருந்தேன். திரும்பி வந்த விஜய் நான் படுத்துகிட்டு இருப்பதை பார்த்துட்டு "அம்மாவை எழுப்பு. ஒழுங்கா போய் உள்ள படுக்க சொல்லு. எதுக்கு அம்மா வெளியே படுக்கணும். நான் நைட் ஷூட்க்கு போனா காலையில தான் வருவேன். அவங்கள உள்ள போய் படுக்க சொல்லு" என சண்டை போட்டாராம். சரின்னு சொல்லி நான் உள்ள போய் படுத்துகிட்டேன். பிறகு அவர் வந்த உடனே நான் வெளியே வந்துவிட்டேன். ஷாட் ரெடின்னு கூப்பிட்டாங்க. நடித்து குடுத்துட்டு நான் கிளம்பிட்டேன். பாலச்சந்தர் சார் போன் பண்ணி பேசினார். "ரொம்ப தேங்க்ஸ் டா. நான் சொன்னதுக்காக நீ இங்க வந்து நடிச்சு குடுத்துட்டு போன" என பாராட்டினார் என பகிர்ந்து இருந்தார் நடிகை சாந்தி வில்லியம்ஸ்.