Petrol Diesel Price Today, March 17: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எந்தவித மாற்றமும் இன்றி,  அதே நிலையில் தொடர்கிறது.


பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்?


சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பன செய்யப்படுகிறது. அதன்படி, அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34-ஆகவும் தொடர்கிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அடுத்த சில நாட்களுக்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையில் எந்த ஏற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 660 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், அண்மையில் பெட்ரோல், டீசல் விலையில் தலா 2 ரூபாயை மத்திய அரசு குறைத்தது குறிப்பிடத்தக்கது.


எரிபொருள் விலை நிர்ணயம்:


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கருத்தில் கொண்டு, எரிபொருள் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் போன்றவற்றின் விலையை நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும், எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறையும் மாற்றியமைக்கப்படுகிறது.  2014ம் ஆண்டு பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்றபோது, பெட்ரோல், டீசல் விலை பாதியாக குறைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர் எதிராக பெட்ரோல், டீசல் விலை மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. அதோடு, பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றி அமைக்கலாம் என்ற நடைமுறயையும் பாஜக தலைமையிலான அரசு அறிமுகப்படுத்தியது.  கொரோனா காலங்களில் கச்சா எண்ணெய் விலை சரிந்தது. உக்ரைனுக்கு எதிரான போரை தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்தும் இந்தியாவிற்கு மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்யப்பட்டது. ஆனாலும், எரிபொருட்களின் விலை குறைக்கப்படவில்லை. இதனால், உச்சபட்சமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110 வரை விற்பனையானது, வாகன ஓட்டிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.