உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷேன் நிகம் , ஷாந்தனு நடித்துள்ள பல்டி திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. ப்ரீத்தி அஸ்ராணி நாயகியாக நடித்துள்ளார் . செல்வராகவன் , அல்ஃபோன்ஸ் புத்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். கபடியை மையப்படுத்திய ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள பல்டி படத்திற்கு ரசிகர்கள் சமூக வலைதளத்தில் என்ன விமர்சனம் வழங்கியிருக்கிறார்கள் என பார்க்கலாம்
பல்டி திரைப்பட விமர்சனம்
ஒரு கொலையுடன் தொடங்குகிறது படத்தின் கதை. கொலை செய்யப்பட்ட நபர் யார். எதனால் கொலை செய்யப்படுகிறார் என்கிற கேள்வியோடு சுவாரஸ்யமாக தொடங்குகிறது பல்டி திரைப்படம். கபடி விளையாட்டு விரர்களான நான்கு நண்பர்கள் ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் கும்பலுக்கிடையில் சிக்கிக் கொள்கிறார்கள், விறுவிறுப்பான கபடி போட்டி , இன்னொரு பக்கம் கேங்ஸ்டர் டிராமா என கதை சுவாரஸ்யமாக பிண்ணப் பட்டிருக்கிறது. ஷேன் நிகம் மற்றும் ஷாந்தனு இருவரது கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன . மாஸ் காட்சிகளில் சாய் அப்யங்கரின் பின்னணி இசை கவனமீர்க்கிறது. வில்லனாக செல்வராகவன் மிரட்டியிருக்கிறார். 15 ஆண்டுகளுக்குப் பின் மலையாள சினிமாவிற்கு திரும்பியிருக்கும் சாந்தனுவுக்கு நல்ல கம்பேக் படம் பல்டி .