நடிகர் அஜித் தன் குடும்பத்துடன் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருக்கும் நிலையில் அவரது மனைவி ஷாலினி பகிர்ந்துள்ள அஜித்தின் புகைப்படங்கள் ட்விட்டரில் லைக்ஸ் அள்ளி வருகின்றன.
இந்த ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான துணிவு படம் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து ஹிட் அடித்துள்ளது. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து வெளியான இப்படம் உலகம் முழுவதும் 250 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் துணிவு படத்தை அடுத்து ஏகே 62 படம் குறித்து நாளொரு தகவலாக அஜித் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். மற்றொரு புறம் அஜித் தன் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் ஹிட் அடித்து வருகின்றன.
இந்நிலையில், அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள அஜித்தின் புகைப்படங்கள் இன்ஸ்டாவில் ஹிட் அடித்துள்ளன.
ஒரு புறம் இணையத்தில் ஏகே 62 தகவல்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில் மற்றொரு புறம் அஜித்தின் இந்தப் புகைப்படங்கள் லைக்ஸ் அள்ளி வருகின்றன.
முன்னதாக ஏகே 62 படத்துக்கான கதையை பகிர்வதற்காக மகிழ் திருமேனி லண்டன் செல்வதாகத் தகவல்கள் வெளியாகின.
அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் எனத் தகவல்கள் வெளியான நிலையில், திடீர் திருப்பமாக விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தை இயக்கவில்லை என கடந்த வாரம் தொடங்கி சமூக வலைதளங்களில் தகவல்கள் வலம் வரத் தொடங்கின.
தொடர்ந்து ஏகே 63 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் எனத் தகவல்கள் வெளியான நிலையில், பின்னர் இப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதிலாக இயக்குநர் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
ஏகே 62 அறிவிப்பு வெளியாகி 8 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், அண்மையில் அஜித்தை சந்தித்து விக்னேஷ் சிவன் கதையை விளக்கியதாகவும்,ஆனால், அந்தக் கதை தனக்கு பிடிக்கவில்லை என்றும் வேறு கதை தயார் செய்யுமாறும் அஜித் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இவை குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகாத நிலையில் முன்னதாக விக்னேஷ் சிவன் தன் ட்விட்டர் பயோ மற்றும் கவர் ஃபோட்டோவில் இருந்து ஏகே 62 பெயரையும், அஜித் ஃபோட்டோவையும் நீக்கிய சம்பவம் இணையத்தில் பேசுபொருளானது.
மேலும் விக்னேஷ் சிவனின் டிவிட்டர் பயோ மற்றும் கவர் ஸ்க்ரீன்ஷாட்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இச்சூழலில் லைகா நிறுவனம் இயக்குநர் மகிழ் திருமேனியை ஏகே 62 படத்துக்காக உறுதி செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.