ஷகிலா என்று ஆண்கள் சொல்வதில்லை. ஷகீலாலாலா... என்று போதையுடன் ரசித்துத்தான் சொல்வார்கள். கதாநாயகிகளுக்கு இணையாக ரசிகர்களை சம்பாதித்து வைத்திருப்பவர் கவர்ச்சி நடிகை ஷகிலா. 


ஷகிலா தனது வாழ்க்கை பற்றி பல பேட்டிகளில் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். அவரது வாழ்க்கை ஏற்கெனவே படமாக்கப்பட்டு சர்ச்சைகளை ஈர்த்த நிலையில் இப்போது மீண்டும் படமாக்கப்பட உள்ளது.


கடந்த வருடம் ஷகிலா என்ற பெயரிலேயே படமாக எடுத்து வெளியிடப்பட்டது. அதில் ஷகிலாவாக ரிச்சா சதா நடித்திருந்தார். ஆனால், இத்திரைப்படத்தில் ஷகிலாவை மலையாள திரையுலகில் இருந்து விரட்ட முன்னணி நடிகர்கள் சதி செய்ததுபோல் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருந்தன. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. அந்தப் படத்தில் ஷகிலாவுக்கு எதிராக மலையாள முன்னணி நடிகர்கள் செயல்பட்டு அவரை மலையாளத் திரையிலகில் இருந்தே விரட்டி அடித்ததாக காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதனால் இந்தத் திரைப்படத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.


இந்த நிலையில் தான் மீண்டும் ஷகிலா வாழ்க்கையை மையமாக வைத்து இந்தி, தமிழில் படம் எடுக்கவுள்ளனர். 


ஷகிலாவாக ஹூமா குரேஷி!


இந்தப் படத்தில் ஷகிலா வேடத்தில் காலா படத்தில் ரஜினிகாந்தின் காதலியாக நடித்த பிரபல நடிகை ஹூமா குரேஷி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹூமா அழுத்தமான நடிகை என்பதால், அவர் மட்டும் ஷகிலாவாக நடிக்க ஒப்பந்தமாகிவிட்டால் இத்திரைப்படம் தமிழ் மட்டும் தெலுங்கில் மெகா ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அன்று சில்க்.. இன்று ஷகிலா..


நமக்கெல்லாம் சில்க் ஸ்மிதாவாகத் தெரிந்தவரின் உண்மையான பெயர் விஜயலட்சுமி. இவர் ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவர். சில்க் முதலில் மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கி, பின்னர் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நிறைய படங்களில் நடித்தார். ஓரிரு இந்திப் படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் சில்கை அறிமுகம் செய்தவர் வினு சக்ரவர்த்தி.


சில்க் ஸ்மிதா கடைசியாக நடித்த படம் ‘சுபாஷ்’. அர்ஜுன் ஹீரோவாக நடித்த இந்தப் படம், 1996-ம் ஆண்டு ரிலீஸானது. அந்த வருடம் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார் சில்க் ஸ்மிதா. அப்போது அவருக்கு 35 வயது.


சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு, இந்தியில் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக வெளியானது. சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடித்தார். இந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.


டர்ட்டி பிக்சர் படத்திலும் சில்க் வளர்ச்சியைப் பிடிக்காமல் தமிழின் முன்னணி நடிகர்கள் சதி செய்ததாக காட்சிகள் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு காலகட்டத்தில் சில்க்கின் சிங்கிள் பாடல் இல்லாத படம் சென்டிமென்ட்டாகவே ஹிட் ஆகாது என்று பேசப்பட்டது கூட உண்டு.


சில்க்கின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட டர்ட்டி பிக்சர் போல், ஷகிலாவின் வாழ்க்கைப் படமும் ஹிட் அடிக்குமா என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.