சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஜவகர் மித்ரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 44வது படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியிடப்பட இருக்கிறது. இந்தப்படத்தில் தனுஷுடன் நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இதற்கான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். 






முன்னதாக படத்தில் நடிப்பவர்கள் பட்டியலை வெளியிட்ட நிலையில் படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பையும் அந்த நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. படத்துக்கான ஷூட்டிங் வேலைகள் நாளைமுதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.









அண்மையில் நடிகர் தனுஷின் பிறந்தநாளையொட்டி ’மாறன்’ என்கிற அவரது 43வது படத்தின் டைட்டில் வெளியான நிலையில் தற்போது 44வது படத்துக்கான டைட்டிலும் வெளியாக இருக்கிறது.  கடந்த 2016ம் ஆண்டு ‘துருவங்கள் பதினாறு’  திரைப்படம் மூலமாக சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அவரது 43வது திரைப்படம் உருவாகி வருகிறது. கார்த்திக் நரேன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று கூடுதலாகவே உள்ளது. படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘மாளவிகா மோகனன்’ நடித்து வருகிறார். இந்த படத்தில்  ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, மகேந்திரன், கிருஷ்ணகுமார் போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.  சத்யஜோதி பிலிம்ஸ் தனுஷ் 43 படத்தை தயாரித்து வருகிறது.இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்  இசையமைத்துள்ளார்.இந்நிலையில் இன்று படத்தின் நாயகன் தனுஷின் 38 வது பிறந்தநாளை முன்னிட்டு, தனுஷ்43 படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியிட இருப்பதாக முன்னதாக அறிவித்திருந்தது படக்குழு. இந்நிலையில் அண்மையில் தனுஷ் 43 படத்தின் போஸ்டர் வெளியானது. படத்திற்கு 'மாறன்’ என பெயர் வைத்துள்ளனர்.தற்போது வெளியாகியுள்ள தனுஷின் 43 வது படமான ’மாறன்’ டைட்டில் போஸ்டர் இணையத்தை கலக்கி வருகின்றன.