ஜவான்


அட்லீ இயக்கியிருக்கும் ஜவான் திரைப்படம் பாலிவுட்டில் வசூல் சாதனை படைத்து வருகிறது. ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, சஞ்சய் தத், தீபிகா படூகோன், பிரியாமணி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.ஷாருக் கானின் மனைவி கெளரி கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.


கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான ஜவான் திரைப்படம் இன்றுடன் 7 ஆவது நாளாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலை நேற்று வரை மொத்தம் ஆறு நாட்களில் ஜவான் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்கிற தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.


முதல் நாள் வசூல்






தமிழ், இந்தி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான ஜவான் திரைப்படம் முதல் நாளில் வரலாறு காணாத வசூல் சாதனை படைத்தது. வெளியான முதல் நாளில் மட்டுமே உலகளவில் மொத்தம் ரூ.129 கோடி வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் கொஞ்சமும் தொய்வில்லாமல் தொடங்கிய அதே வேகத்தில் பாய்ந்து வருகிறது ஜவான் திரைப்படம். 


முதல் நாள் : ரூ 129.60 கோடி


இரண்டாவது நாள் : ரூ 110.87 கோடி


மூன்றாவது நாள் : ரூ 144.22 கோடி


நான்காவது நாள் : ரூ 136. 10 கோடி.






என மொத்தம் நான்கு நாட்களில் வசூல் செய்த ஜவான், ஐந்தாவது நாளில் ரூ 574.89 கோடி வசூல் செய்திருந்தது 


ஆறாவது நாள்






 நேற்றுடன் ஆறாவது நாளை திரையரங்கில் நிறைவு செய்த ஜவான் திரைப்படம் மொத்தம் ரூ 621.12 கோடிகளை வசூல் செய்துள்ளது. இந்த வார இறுதிக்குள் ஜவான் திரைப்படம் 800 கோடிகளை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி சாதனை படைத்த தன்னுடைய பதான் பட சாதனையை ஜவான் மூலம் ஷாருக் முறியடிப்பார் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.