நடிகர் அமிர் கானின்மாபெரும் வெற்றிப் படமான ’தங்கல்’ பட சாதனையை, ஷாருக்கின் ’பதான்’ படம் முறியடித்துள்ளது.


ஜனவரி 25ஆம் தேதி குடியரசு தின ஸ்பெஷலாக வெளியான ஷாருக்கின் பதான் படம் பல பாக்ஸ் ஆஃபிஸ் ரெக்கார்ட்களை அடித்து நொறுக்கி தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது.


டங்கல் பட சாதனை


அந்த வகையில் தற்போது பாலிவுட்டின் மற்றொரு முன்னணி நடிகர் அமீர் கானின் தங்கல் பட சாதனையை முறியடித்துள்ளது.


2017ஆம் ஆண்டு குஸ்தி விளையாட்டை மையமாகக் கொண்டு வெளியான தங்கல் படம் அமீர் கானுக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.


தன் இரு மகள்களுக்கு சிறு வயது முதல் குஸ்தி பயிற்றுவிக்கும் கறாரான குஸ்தி வீரராக அமீர் கான் இப்படத்தின் மூலம் நாடு தாண்டி லைக்ஸ் அள்ளினார்.


இந்தி சினிமா வட்டாரங்களில் இது வரை வெளியான படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படம் எனும் சாதனையை தங்கல் பெற்றிருந்தது. குறிப்பாக இப்படம் சீன நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்று ஓடித் தீர்த்த நிலையில், உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்தது.


முறியடித்த பதான்


இந்தியில் டங்கல் படம் 387 கோடி வசூலித்த நிலையில், அதனை பதான் படம் இன்று முறியடித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 481 கோடி வசூலித்துள்ள பதான் படம் உலகம் முழுவதும் 780 கோடி வசூலித்துள்ளது.


எனினும் பாகுபலி 2 வின் இந்தி வசூலான 511 கோடியை டங்கல் முறியடிக்க இன்னும் ஒரு வார காலம் தேவைப்படும் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


 






அதே நேரத்தில் வெளிநாடுகளில் ட்டும் டங்கல் படம் 2000 கோடிக்கு மேல் ஈட்டி யாரும் எளிதில் தொட முடியாத இமாலய சாதனையை தங்கல் தன்வசம் வைத்துள்ளது.


பதான் வெற்றி


முன்னதாக பதான் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷாருக், கோவிட் காலத்தின்போது நான் சில ஆண்டுகள் வேலை செய்யவில்லை. ஆனால் எனது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் என்னால் நேரத்தை செலவிட முடிந்தது. என் குழந்தைகள் ஆர்யன் மற்றும் சுஹானா வளர்வதை என்னால் பார்க்க முடிந்தது.


என்னுடைய கடைசி படம் சரியாக ஓடாதபோது சமைக்கக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன், ரெட் சில்லிஸ் ஈட்டரி என்ற உணவகத்தைத் தொடங்க நினைத்தேன். 


மக்களை அழைத்து எங்கள் படத்தை நிம்மதியாக வெளியிட அனுமதிக்குமாறு கேட்க வேண்டிய நிலைமை முன்னர் இருந்தது. பதான் படத்தை மக்களுக்காக வெளியிட எங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். 


நாம் செய்யும் செயல் வேலைக்கு ஆகாதபோது நம்மை நேசிப்பவர்களிடம் செல்லுங்கள் என்று கூறுவார்கள், எனக்கு அன்பைக் கொடுக்கும் லட்சக்கணக்கானவர்கள் இருப்பது என் அதிர்ஷ்டம். நான் மகிழ்ச்சியாக இருக்கும்போதும் என் பால்கனிக்கு வருவேன், நான் சோகமாக இருக்கும்போதும் என் பால்கனிக்கு வருவேன்” எனப் பேசினார்.