நல்ல நேரம்:


காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


கௌரி நல்ல நேரம்:


காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை


மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை


இராகு:


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


குளிகை:


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை


எமகண்டம்:


காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


சூலம் - கிழக்கு


மேஷம்


புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். புதிய தொழில் நிமிர்த்தமான முயற்சிகளும், சிந்தனைகளும் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.


ரிஷபம்


மனை சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் சற்று பொறுமையுடன் செயல்படவும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். தாயாரை பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதளவில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். தனம் நிறைந்த நாள்.


மிதுனம்


விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். செயல்பாடுகளில் துரிதம் மேம்படும். அரசு சார்ந்த செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் கிடைக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புதிய வாகனம் வாங்குவது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மேன்மை நிறைந்த நாள்.


கடகம்


குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கால்நடை சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்களுக்கு ஆதரவு கிடைக்கும்.  மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். ஆரோக்கியம் நிறைந்த நாள்.


சிம்மம்


மனதளவில் ஒருவிதமான சோர்வு வந்து நீங்கும். உடனிருப்பவர்களிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றம் ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் இருக்கவும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் தெளிவு ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். புதுமைகள் நிறைந்த நாள்.


கன்னி


குடும்ப உறுப்பினர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். கற்றல் திறனில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். பூர்வீக சொத்துக்களின் வழியில் சில விரயங்கள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.


துலாம்


கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். சாதுரியமான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். சலனம் நிறைந்த நாள்.


விருச்சிகம்


கடந்த கால நிகழ்வுகளை எண்ணி மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். முக்கியமான சிலருடைய மறைமுக ஆதரவு கிடைக்கும். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வாகன வசதிகள் மேம்படும். மறதிகள் குறையும் நாள்.


தனுசு


கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். எதிர்பார்த்த சில தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். புதிய நண்பர்களின் மூலம்  உற்சாகமடைவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.


மகரம்


கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்து செல்லவும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். இன்பம் நிறைந்த நாள்.


கும்பம்


மனதளவில் புதுவிதமான உத்வேகத்துடன் காணப்படுவீர்கள். கௌரவப் பொறுப்புகளின் மூலம் மதிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.


மீனம்


உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வியாபாரம் சார்ந்த பணிகளில் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் திருப்பங்கள் ஏற்படும். மற்றவரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். புதுவிதமான பயணங்கள் மேற்கொள்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.