இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் பாலிவுட் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானால், நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகத்தான் இருக்கும்.



பிகில் படத்தை தொடர்ந்து, பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கும் இயக்குநர் அட்லி, ஷாருக்கானை இயக்க இருக்கிறார். இத்திரைப்படத்தில் நயன்தாராவை நடிக்க வைப்பதற்காக தயாரிப்பாளர்கள் தரப்பு அவரிடம் பேசி வருவதாக கூறப்படும் நிலையில் இதுவரை இத்தகவல் ஏதும் உறுதி செய்யப்படாதா ஒன்றாகவே உள்ளது. ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் இத்திரைப்படத்தை இந்தாண்டின் பிற்பகுதியிலோ அல்லது அடுத்தாண்டின் தொடக்கத்திலோ வெளியிட படத்தயாரிப்பு குழு திட்டமிட்டுள்ளது. 


இது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாரா நடிப்பது உறுதியானால், அட்லி இயக்கத்தில் அவர் நடிக்கும் மூன்றாவது படமாக இது இருக்கும். பாகுபலியைத் தொடர்ந்து பெரிய அளவில் தயாராகி வரும் இந்த திரைப்படம், இந்தியாவின் முக்கிய மொழிகளில் படமாக்கப்பட உள்ளது. 



ஆக்‌ஷ்ன் - த்ரில்லர் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அட்லியின் வழக்கமான கமெர்சியல் சாயமும் படத்தில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த திரைப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும், கதாநாயகி கதாப்பாத்திரம் குறித்து எந்த தகவல்களையும் படக்குழு தெரிவிக்கவில்லை. 


கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயன் தாரா கடந்த 2003ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மனசினகாரே என்ற திரைப்படம் மூலம் முதன்முதலாக திரையுலகத்திற்கு அறிமுகமானார். கடந்த 2005ஆம் ஆண்டில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகமான நடிகை நயன் தாரா, நடிகர் ரஜினி உடன் சந்திரமுகி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த்திரையுலகின் முக்கிய நடிகையாக வலம் வந்தார். 


2010ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை படங்களை நடிப்பத்தை நிறுத்தி இருந்த நயன்தாரா, இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான ராஜாராணி திரைப்படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். பெண்களுக்கான வலுவான கதாபாத்திரத்தை கொண்ட திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்ததன் மூலம் கோலிவிட் ஹீரோயின்களில் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ள நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். மூன்று ஆண்டுகள் திரையுலகை விட்டு சென்றிருந்தாலும் மீண்டும் நடிக்க வந்து பெண் சூப்பர் ஸ்டாரான நயன்தாரா பாலிவுட்டிலும் ஜொலிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.






இந்நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக நிச்சயம் திரையரங்கில் நெற்றிக்கண் வருவதற்கான வாய்ப்பு இல்லாத சூழல் உள்ளது. இதனால் நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தினை நேரடியாக ஓடிடியில் வெளியிடுவது தொடர்வாக படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். எப்பொழுது இத்திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் காத்திருந்தனர். இந்நிலையில் நெற்றிக்கண் திரைப்படம் ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூக்குத்தி அம்மன் திரைப்படத்துக்கு பின்னர் நெற்றிக்கண் படம் மூலம் மீண்டும் நயன் தாரா ஓடிடி பக்கம் செல்கிறார்.