மும்பை விமான நிலையத்தில் நடிகர் ஷாரூக்கானிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Continues below advertisement


1980களின் பிற்பகுதியில்  தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க தொடங்கிய ஷாரூக்கான் 1992 ஆம் ஆண்டு வெளியான தீவானா படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் பாலிவுட்டின் பாட்ஷா என்றழைக்கப்படும் ஷாரூக் தற்போது அட்லீ இயக்கத்தில் ‘ஜவான்’, ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ‘டங்கி’, ஜான் ஆபிரகாமுடன் ‘பதான்’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 






இது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் கடந்தாண்டு மும்பையில்  சொகுசு கப்பல் ஒன்றில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின் நடந்த விசாரணையில் கடந்த மே மாதம் போதுமான ஆதாரம் இல்லாத காரணத்தால் ஆர்யன் கான் உள்ளிட்ட 5 பேர் விடுவிக்கப்பட்டனர். இதன்மூலம் ஆர்யன் கான் மீண்டும் தனது சகஜமான வாழ்க்கைக்கு திரும்பினார். 


மேலும் ஆர்யன் ஒரு எழுத்தாளராக அறிமுகமாக உள்ளதாகவும், ஏற்கனவே அவர் சில கதைகளை எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே  நேற்று மாலை மும்பை விமான நிலையத்தில் நடிகர் ஷாரூக்கான் தனது இரு மகன்களான ஆர்யன் கான் மற்றும் அப்ராம் கான் ஆகியோரோடு வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் ஷாரூக்கானோடு செல்ஃபி எடுக்க முயன்றார். இதனை ரசிகர் முயற்சிக்கையில் ஷாரூக் கையை பிடிக்க முயன்றார்.


இதனை சற்றும் எதிர்பாராத ஷாரூக் கோபத்தில் அந்த ரசிகர் பக்கம் செல்ல உடனடியாக ஆர்யன் கான் அவரை சமாதானப்படுத்தி கூட்டிச் சென்றார். இதனைப் பார்த்த பலரும் என்னதான் பிரபலமாக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என ஷாரூக்கானிற்கு சப்போர்ட் செய்து கருத்து தெரிவித்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண