அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் உள்ளிட்டோரின் வரிசையில் 2000ம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி போட்டியில் பங்கேற்று முதல் ரன்னர்-அப் கிரீடத்தை தன்னுடைய 17வது வயதில் வென்றவர் பிரியங்கா சோப்ரா. அதை தொடர்ந்து மிஸ் வேர்ல்ட் கிரீடத்தையும் வென்றார். வழக்கமாக அழகி போட்டிகளில் குதர்க்கமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளிப்பதும் முக்கியமானதாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் இரண்டு போட்டிகளிலுமே தன்னுடைய திறமையான பதிலால் அனைவரையும் அசர வைத்தவர் பிரியங்கா  சோப்ரா. 


 




அந்த வகையில் மிஸ் இந்தியா அழகி போட்டியின் போது நடுவர்களில் ஒருவராக இடம் பெற்றவர் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான். பிரியங்கா சோப்ராவிடம் கேள்வி கேட்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அப்போது அவர் பிரியங்கா சோப்ராவிடம்  "நானும் உங்களை போலவே பதட்டமாக இருக்கிறேன்.  நீங்கள் திருமணம் செய்து கொண்டால் பின்வருவனவற்றில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள்? அசார் பாய் போன்ற ஒரு விளையாட்டு வீரரையா? - அவர் உங்களை உலகம் முழுவதும் அழைத்துச் சென்று, உங்கள் நாட்டையும் உங்களையும்   பெருமைப்படுத்துவார். அல்லது ஸ்வரோவ்ஸ்கி போன்ற உச்சரிக்க கடினமான பெயரைக் கொண்ட ஒரு கலைநயம் கொண்ட தொழிலதிபரையா? நகைகள் மற்றும் நேர்த்தியான நெக்லஸ்களால் உங்களை அலங்கரிப்பார். அல்லது என்னை போன்ற ஒரு பாலிவுட் ஸ்டாராயா? 


இது ஒரு கற்பனை திருமணம் குறித்த சிக்கலான கேள்வி என்றாலும்  அதற்கு பதில் அளிப்பதை தவிர உங்களுக்கு வேறு வழியில்லை. நீங்கள் பதில் அளிப்பதற்கு முன்னர் நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். உங்களுடைய பதில் எதுவாக இருந்தாலும் அது உங்களின் மதிப்பெண்களை பாதிக்காது. அசார் பாய் மற்றும் ஸ்வரோவ்ஸ்கி கவலைப்பட மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்" என நீண்ட கேள்வியை முன்வைத்து இருந்தார் நடிகர் ஷாருக்கான்.


 







இந்த கேள்விக்கு மிகவும் நிதானமாகவும் புத்திசாலித்தனமாகவும் பதிலளித்து இருந்தார் பிரியங்கா சோப்ரா. "இந்த மூன்று கடினமானவர்களில் இருந்து ஒருவரை தேர்ந்து எடுக்க வேண்டும் என்றால் நான் இந்திய விளையாட்டு வீரரை தான் தேர்ந்து எடுப்பேன். ஏனென்றால், நான் வீடு திரும்பும்போதோ, அல்லது அவர் வீடு திரும்பும்போதோ, இந்தியாவைப் போலவே நானும் அவரை நினைத்து பெருமைப்படுகிறேன் என சொல்லி ஆதரவாக இருப்பேன் என சொல்வேன். அவரை பார்த்து உன்னால் முடிந்ததை சிறப்பாக செய். நீ நிச்சயம் சிறந்தவன் என சொல்வேன். என் நாட்டிற்கு பெருமை சேர்க்க கூடிய வலிமையான என்னுடைய கணவனை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுவேன். மிக்க  நன்றி" என பதில் அளித்து இருந்தார் பிரியங்கா சோப்ரா. இந்த பிளாஷ் பேக்  வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.