கடந்த ஆண்டு அதாவது 2023ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் உருவான பதான் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி சக்கைபோடு போட்டது. படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், சர்ச்சைகளுக்கு மத்தியிலும் பலத்த வரவேற்புடன் படம் வெளியாகி வசூலில் கொடி கட்டிப் பறந்தது.


சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கானின் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. மட்டுமில்லாமல், வசூலில் ஆயிரம் கோடியை அள்ளியது. இது ஹிந்தி திரை உலகில் புதிய மைல் கல்லாக அமைந்தது.  இந்த படத்திற்குப் பின்னர் வெளியான ஷாருக்கானின் ஜவான் படமும் ஆயிரம் கோடியை வசூலில் அள்ளிக் கொடுக்க ஷாருக்கானை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 


பதான் திரைப்படம்


ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் ஆகியோர் முதன்முறையாக பதான் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை சித்தார்த் ஆனந்த் எழுதி இயக்க, யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இது YRF ஸ்பை யுனிவர்ஸின் நான்காவது பாகமாகும், மேலும், கடந்த 2018 ம் ஆண்டு வெளியான ஜீரோ படத்திற்கு பிறகு ஷாருக் கான் இந்த படத்தில் நடித்துள்ளார்.  இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த ஜனவரி 25, 2023 அன்று வெளியிடப்பட்டது.


இந்த படத்தில் சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்தார். இப்படத்தில் ஷாருக்கான் RAW பீல்ட் ஏஜெண்டான பதான் ஆக நடித்துள்ளார். பதான் படத்தின் இசையை விஷால்-சேகர் இசையமைக்க, மேலும் சஞ்சித் பல்ஹாரா மற்றும் அங்கித் பல்ஹாரா ஆகியோர் பின்னணி இசையமைத்தனர்.


இந்நிலையில் ஜவான் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும், YRF ஸ்பை யுனிவர்ஸின் எட்டாம் பாகமாக உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதாவது, ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹை, போர், பதான், டைகர் 3, வார் 2 மற்றும் ஆலியா பட் நடிக்கும் பெயரிடப்படாத படம் உள்ளிட்ட படங்களின் வரிசையில் பதான் படத்தின் இரண்டாம் பாகம் 8வது படமாக அமையவுள்ளது. 


தாதா சாகேப் பால்கே சர்வதேச விருதுகள்


ஷாருக்கானின் ஜவான் படத்திற்கு தாதா சாகேப் பால்கே சர்வதேச விருதுகள் 2024இல் சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த நடிகைக்கான விருது, சிறந்த இயக்குநருக்கான விருது, சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது.