Anant Ambani: அம்பானி வீட்டு விசேஷத்தில் ஆர்.ஆர்.ஆர் பாடலுக்கு நடனமாடிய அமீர் கான், ஷாருக் கான், சல்மான் கான்!

ஆனந்த் அம்பானி திருமணக் கொண்டாட்டத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் , ஷாருக்கான் மற்றும் சல்மான்கான் மூவரும் இணைந்து நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது

Continues below advertisement

ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு  பாடலுக்கு பாலிவுட்டின் மூன்று கான்களும் நடனமாடியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Continues below advertisement

ஆனந்த் அம்பானி

முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சண்டை வரும் ஜூலை 12 ஆம் தேதி கரம் பிடிக்க இருக்கிறார். திருமணத்திற்கும் முன்பாக ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 தேதி முதல் நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன் காம்ப்ளக்ஸில் இந்த நிகழ்வானது மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்திய அளவிலான பிரபலங்கள், வி.ஐ.பிக்கள், வி.வி.ஐ.பிக்கள் மட்டுமின்றி உலகளவில் உள்ள ஏராளமான பிரபலங்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதில் பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

ஒரே மேடையில் மூன்று கான்

திரையுலைப் பொறுத்தவரை பாலிவுட் திரையுலகின் கிட்டதட்ட அனைத்து பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். தென் இந்திய திரைப் பிரபலங்கள் ராம் சரண் , சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  உள்ளிட்டவர்கள் மூன்றாவது நாளான இன்று இந்த நிகழ்ச்சியில் கந்துகொள்ள சென்றுள்ளார்கள். கோடிக்கணக்கான  ரசிகர்களைக் கொண்ட ரிஹானா இந்த நிகழ்ச்சியில் நடனமாடியது , பெரும்பாலும் எந்த நிகழ்விலும் கலந்துகொள்ளாத தோனி இந்த நிகழ்ச்சிக்கு தனது குடும்பத்துடன் வருகை தந்தது என பல அதிசயங்கள் இந்த நிகழ்ச்சியில் நடந்திருக்கின்றன. 

கடந்த இரண்டு நாட்களில் நடைபெற்ற காக்டெயில் பார்ட்டியில் பாலிவுட் பிரபலங்கள் இந்த  நிகழ்ச்சியில் நடனமாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ஷாருக் கான் , சல்மான் கான்  மற்றும் அமீர் கான் மூவரும் இனைந்து இந்த நிகழ்ச்சியில் நடனமாடியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு இவர்கள் மூவரும் இணைந்து நடனமாடினார்கள். சல்மான் கான் டான்ஸ் ஸ்டெப்ஸ் சொல்லித் தர அமீர் கான் மற்றும் ஷாருக் கானும் சல்மான் கானை பின்பற்றி ஆடத் தொடங்குகிறார்கள். பாலிவுட்டின் பிரபல நடிகர்களாக இந்த மூவரையும் ஒரே மேடையில் பார்ப்பது என்பது மிக அபூர்வமான ஒரு நிகழ்வு . 


மேலும் படிக்க : Manjummel Boys: குணா படத்திற்கு கமல்ஹாசன் முதலில் வைத்த பெயர் என்ன தெரியுமா? மஞ்சுமெல் பாய்ஸ் குழுவிடம் பகிர்ந்த உலக நாயகன்!

Roshini : அபிராமி அபிராமி ! என உருகிய கமல்... 'குணா' பட நாயகி ரோஷிணி இப்போ என்ன செய்கிறார்?

Continues below advertisement