விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோவான 'குக் வித் கோமாளி சீசன் 5' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஷாலினி ஜோயா. இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் யூடியூபர் டிடிஎப் வாசனின் கேர்ள் பிரெண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாள சினிமாவை உலுக்கி எடுத்து வரும் ஹேமா கமிட்டி அறிக்கை தென்னிந்திய திரையுலகம் எங்கும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பெரும் புள்ளிகள் பலரும் சிக்கி வருகிறார்கள். அதில் ஒருவர் தான் கேரள நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் எடவேல பாபு. அவருடன் குக்கு வித் கோமாளி பிரபலம் ஷாலினி ஜோயா எடுத்த பழைய டிக் டாக் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருவதுடன் ஜோயா குறித்த தவறான சில விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனால் கொந்தளித்த ஷாலின் ஜோயா தன்னுடைய மனக்குமுறலை பதிவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். நான் என்ன சொல்ல வேண்டும்? பல வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட டிக் டாக் வீடியோ அது. அப்போது இந்த பாடல் வைரலானது. பிறகு பாபுவை வைத்து பாடலின் பெயரை வைத்து வீடியோ எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து செய்தேன்.
இப்படி பட்ட ஒரு மோசமான சமயத்தில் அந்த வீடியோவை ட்ரெண்டிங் செய்து அதன் மூலம் என்னை மோசமான பெண்ணாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதில் நான் என்ன செய்ய முடியும்? நீங்களே சொல்லுங்கள். இதற்கு நான் விளக்கம் கொடுத்தால் அதை வேறு விதமாக மாற்றி அதை வைத்த சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். சைபர் உலகம் கொடூரமானது. பெயர் இல்லாத இவர்களை நான் வெறுக்கிறேன் என ஷாலின் ஜோயா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கோபம் கொந்தளிக்க விளக்கம் கொடுத்து இருந்தார்.
ஷாலின் ஜோயாவின் இந்த விளக்கத்திற்கு பலரும் கமெண்ட் மூலம் ஆறுதல் கூறி வந்தாலும் அதற்கும் ஜோயா மனம் வருந்தி பதிவிட்டு இருந்தார்.