Sevvanthi Actress Divya Shridhar: எவ்ளோ விலை? 'மன அழுத்தம் தாண்டிவந்து புது கார் வாங்கியாச்சு..’ : ’செவ்வந்தி’ திவ்யாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..

தன்னம்பிக்கை தளராமல் தொடர்ந்து முனைப்புடன் முன்னேறி வரும் திவ்யாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி உற்சாகத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.

Continues below advertisement

குடும்ப சச்சரவுகள், மன அழுத்தத்திலிருந்து மீண்டு தொடர்ந்து நடித்து வரும் செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா புதிதாக சொகுசு கார் வாங்கி வீடியோ பகிர்ந்துள்ளார்.

Continues below advertisement

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'செவ்வந்தி சீரியல்' நடிகை திவ்யாவும் விஜய் தொலைக்காட்சியின் ’செல்லம்மா’ சீரியல் நடிகர் அர்ணவும் முன்னதாகக் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு முற்றி சண்டை பூதாகரமாக வெடித்தது.

இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் காவல் துறையில் புகார் அளித்தனர்.  தான் கருவுற்றிருக்கும் சூழலில் அர்ணவ் தன்னை அடித்ததாகவும், வேறு ஒரு சீரியல் நடிகையுடன் அர்ணவ் நெருங்கிப் பழகுவதாகவும், அவருக்காக தான் மதம் மாறியதாகவும் திவ்யா முதலில் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து கருக்கலைப்பு செய்யும் நோக்கில் இவ்வாறான குற்றச்சாட்டுகளை திவ்யா முன்வைப்பதாக அர்ணவ் காவல் துறையில் புகார் அளித்தார். சின்னத்திரை வட்டாரத்தில் இருவரும் தங்கள் குடும்ப சண்டையால் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், பூந்தமல்லி அடுத்த நேமம் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் கலந்து கொண்ட அர்ணவ்வை அக்.14ஆம் தேதி காவல் துறையினர் கைது செய்தனர்.  

முன்னதாக சிறையிலிருந்து அர்னவ் ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில், மன அழுத்தத்தில் இருந்து வந்த திவ்யா தனது அம்மா - அப்பா குறித்து பகிர்ந்த பதிவு அவரது ஃபாலோயர்களின் கவனத்தை ஈர்த்து ஆறுதல்களைக் குவித்தது.

திவ்யா கருவுற்று தற்போது ஐந்து மாதங்கள் கடந்துள்ள சூழலில். ‘செவ்வந்தி’ சீரியல் படப்பிடிப்புத் தளத்தில் திவ்யாவுக்கு வளைகாப்பு நடத்தப்பட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்களைக் குவித்து வருகிறது. இந்நிலையில், மன அழுத்தத்தைக் கடந்து கர்ப்ப காலத்திலும் தொடர்ந்து நடித்து வரும் திவ்யா, தற்போது எம்ஜி ஹெக்டார் சொகுசு கார் வாங்கி மகிழ்ச்சியுடன் அது குறித்து வீடியோ பகிர்ந்துள்ளார்.

தன்னம்பிக்கை தளராமல் தொடர்ந்து முனைப்புடன் முன்னேறி வரும் திவ்யாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி உற்சாகத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola