ஒவ்வொரு வீட்டிலும் சமையலறையில் உப்பு ஒரு முக்கிய அங்கமாகும். ஒவ்வொரு உணவுப் பொருளும் ஒரு சிட்டிகை உப்பு இல்லாமல் மந்தமான சுவைகொண்டதாகவே இருக்கும். இது ஒவ்வொரு உணவையும் சுவையானதாக மாற்றுகிறது. சில சுவையான சிக்கனை சமைப்பதாக இருந்தாலும் அல்லது உங்களுக்கு பிடித்த பாஸ்தாவை சுவைப்பதாக இருந்தாலும் சரி, பெரும்பாலான உணவுகளுக்கு உப்பு முதன்மையான மூலப்பொருள். சமைப்பதைத் தவிர, உப்பை பல்வேறு வழிகளிலும் பயன்படுத்தலாம், இதில் சுத்தம் செய்தல் மற்றும் உங்கள் சுகாதாரத்தை கவனித்துக்கொள்வது ஆகியவை அடங்கும்.




உணவைத் தவிர உப்பை வேறு எதற்கு எல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?


அடைபட்ட சிங்குகளை சுத்தம் செய்தல்


வீட்டுக் கிச்சன்களின் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று சிங்க் அடைத்துக் கொள்வது.அந்த சமயங்களில் வினிகருடன் சிறிது  உப்பு சேர்த்து சிங்க் துளைகளில் கலந்து ஊற்றி சிறிது நேரம் ஊறவைக்கவும். சிறிது நேரம் கழித்து அவற்றை ஃப்ளஷ் செய்து சிங்கை சுத்தம் செய்யவும். வினிகருடன் கலந்த உப்புக்கு எதையும் கரைத்து அகற்றும் திறன் உண்டு.அது கிச்சன் அடைப்புகளையும் நீக்கும்.


காய்கறி நறுக்கும் பலகைகளை சுத்தம் செய்தல்


காய்கறி வெட்டும் பலகைகள் பழங்கள் மற்றும் காய்கறிகளின் கறைகளால் அழுக்காகிவிடும். உங்கள் நறுக்கும் பலகை புதியது போல் அழகாக இருக்க, நீங்கள் போதுமான அளவு உப்பை போர்டு முழுவதும் தெளிக்க வேண்டும், பின்னர் அதில் சில துளிகள் எலுமிச்சை துண்டுகளைச் சேர்க்கவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு அதனை நன்கு கழுவவும். போர்டு பிறகு புதியது போலப் பளபளப்பாக மாறிவிடும்.


காபி மற்றும் தேநீர் குவளைகளை சுத்தம் செய்தல்


குவளைகளில் உள்ள காபி மற்றும் தேநீர் கறைகளை அகற்றவும் உப்பு பயனுள்ளதாக இருக்கும், அவை கடுமையாக கழுவிய பிறகும் வெளியேறாது. இதுபோன்ற சமயங்களில், உங்கள் கோப்பைகளில் சிறிதளவு டிஷ் சோப்புடன் சிறிதளவு உப்பை ஊற்றி, அதனை ஊறவைக்கவும், பிறகு அதனைக் கழுவும்போது முற்றிலும் சுத்தமான குவளைகள் மற்றும் கோப்பைகளை நீங்கள் பெறலாம்.


வாய் கொப்பளித்தல்


வாய் சுகாதாரத்தை பராமரிக்க உப்பு ஒரு சிறந்த வழியாகும். பற்களுக்கு இடையில் சிக்கிய உணவை அகற்ற அல்லது வாய் துர்நாற்றத்தைப் போக்க, அரை கப் தண்ணீரில் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் 1 டேபிள் ஸ்பூன் உப்பைக் கலந்து கொப்பளிக்கலாம்.. இந்தக் கலவைகொண்டு 2 அல்லது 3 நிமிடங்கள் கொப்பளிக்கவும். இது நாள் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடன் உணர வைக்கும்.


ஸ்க்ரப்


உப்பைப் பயன்படுத்தி இயற்கையான வீட்டிலேயே தயாரிக்கப்படும் ஸ்க்ரப்களை நீங்கள் உருவாக்கலாம். இதன் மூலம் கெமிக்கல் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபேஸ் ஸ்க்ரப்களை நீங்கள் தவிர்க்க முடியும். உப்பு ஒரு இயற்கை ஸ்க்ரப்பாக செயல்படுகிறது, இது அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்கி உங்கள் முகத்தை நச்சுத்தன்மையற்றதாக்குகிறது. கலவையை உருவாக்க, அரை கப் ஆலிவ் எண்ணெயை எடுத்து, நான்கில் ஒரு பங்கு உப்புடன் நன்கு கலக்கவும். இதை உங்கள் சருமத்தில் சமமாக தடவி ஊறவும். முகத்தை நன்கு கழுவியபின்  விரும்பத்தக்க பளபளப்பான சருமத்தைப் பெறுவீர்கள்.