லியோ


லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ திரைப்படம் இன்றுடன்  நான்காவது நாளாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய், த்ரிஷா, அனுராக் கஷ்யப், சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியானது இந்தப் படம். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 


லியோ விமரசனங்கள்


லியோ திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதி ரசிகர்களை திருப்திபடுத்த தவறியிருக்கிறது. அதே நேரத்தில் படத்தின் வசூல் குறித்தும் பல்வேறு கேள்விகள் முனவைக்கப் படுகின்றன. கடைசி நேரத்தில் திட்டமிடப் பட்டதை விட குறைவான திரையரங்குகளில் வெளியானத் திரைப்படம் எப்படி இவ்வளவு வசூல் எடுக்க முடியும் என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 


லியோ முதல் நாள் வசூல்


லியோ திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகளவில் 148 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழ் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டதைத் தொடந்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. மேலும் படம் குறித்தான விமர்சனங்களால் இரண்டாவது நாளில் லியோ படத்தின் வசூல் கனிசமான அளவு குறைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப் படுகிறது.