பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இதையடுத்து தன்னுடன் சீரியலில் இணைந்து நடித்த நடிகர் அர்னாவை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
அர்னவ் உடன் ஏற்பட்ட தகராறு :
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'செல்லம்மா' தொடரின் கதாநாயகன் அர்னவ் உடன் நடிக்கும் அன்ஷிதா என்பவருடன் நெருக்கமாக இருப்பதால் கர்ப்பமாக இருக்கும் தன்னை துன்புறுத்தி கொடுமைப்படுத்துவதாக கூறி போலீஸ் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் அர்னவ் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அதற்கு பிறகு ஜாமினில் வெளிவந்த அர்னவ் - திவ்யா ஸ்ரீதர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கணவர் அர்னாவுடன் சேர்த்து வைக்கும்படி கோரிக்கை வைத்ததை அர்னவ் நிராகரித்ததால் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். சீரியல் குழுவினரே திவ்யாவிற்கு வளைகாப்பு நடத்தினர். அதன் புகைப்படங்களும் மீடியாவில் வெளியாகின. இந்த நிலையில் திவ்யாவிற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தையை பார்க்க வேண்டும் என அர்னவ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
மீண்டும் ஷூட்டிங் வந்த திவ்யா :
குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஓய்வில் இருந்த திவ்யா தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள தயாராகி விட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு தனது குழந்தையுடன் காரில் அவர் வந்து இறங்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார். அந்த வீடியோவில் தனது இரண்டு குழந்தைகளுடன் திவ்யா காரில் வந்து இறங்குகிறார். கைக்குழந்தையை அணைத்தபடி அவர் நடந்து வருகிறார். குழந்தையை பார்த்துக் கொள்ள யாரும் இல்லாததால் தன்னுடனேயே குழந்தைகளை அழைத்து வந்ததை அவரின் ரசிகர்கள் பலரும் பாராட்டியுள்ளனர். இந்த வீடியோ போஸ்டுக்கு கேப்ஷனாக ' அவள் செய்யாத வேலை, டாஸ்க் கிடையாது. பேக் டூ ஒர்க்' என பதிவிட்டுள்ளார். இந்த போஸ்ட் ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை குவித்து வருகிறது. திவ்யாவின் ரசிகர்கள் பலரும் அவருக்கு அட்வைஸும் கொடுத்து வருகிறார்கள்.