கனா கானும் காலங்கள் என்னும் புகழ்பெற்ற சீரியல் மூலமாக அறிமுகமானவர்  சின்னத்திரை நடிகை ஹரிப்பிரியா. இவர் அதே தொடரில் இணைந்து நடித்த விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். ஹரிப்பிரியா ஒரு பரதாநாட்டிய கலைஞரும் கூட. தொகுப்பாளர் அசாருடன் இணைந்து இவர் பதிவிடும் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அசார் ஹரிப்பிரியா இருவருமே சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளார்களாக இருக்கிறனர். இருவரும் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால்  நாங்கள் காதலர்கள் இல்லை என திட்டவட்டமாக மறுத்தனர்.இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட விஷயங்களை வெளிப்படையாக திருநங்கை மிலாவுடன் பகிர்ந்திருக்கிறார் ஹரிப்பிரியா.







அதில் “ எனக்கு அதிக மன அழுத்தம்  இருந்தால் நான் ஹேர் கட் செய்துக்கொள்ளுவேன். என்னை பொறுத்தவரையில் வெற்றி என்பது பணம் ஈட்டுவது அல்ல. வெளியில் செல்லும் பொழுது மக்கள் நான் செய்யும் வேலைகளை ரசிப்பதுதான் எனக்கு முழுமையான வெற்றி அது ரீல்ஸாக இருந்தாலும் சரி. ஒரு நாள் மட்டும் ஜெயிச்சா போதாது. தினம் தினம் ஜெயிக்க வேண்டும்.மனதை கஷ்படப்படுத்துறது. மனதை சுக்கு நூறாக உடைக்குறது எல்லாமே காதல் வாழ்க்கையில மட்டும்தான்னு கிடையாது. நீங்க எதுமேல அதிகமா அன்பு செலுத்துறீங்களோ , அது இல்லாம போயிட்டா நிச்சயமா மனசு உடையத்தான் செய்யும்.. ஒவ்வொரு முறை என் மனசு சாம்பலாகும் பொழுது , அதை நான் மீண்டும் உருவாக்குவேன். எனக்கு கடவுள் அதுக்கான சக்தியை கொடுத்திருக்காரு. நமக்கு பிடிச்சவங்க நம்மை ரொம்ப அவமதிக்குறமாதிரியான செயல்கள் செய்வதுதான் ரொம்பவே கஷ்டமான விஷயம்.இயக்குநர் டார்வின் அவர்தான் எனக்கு எப்போதுமே நேர்மையான மனிதராக தெரியும். அவர் எப்போதுமே எனக்காக இருப்பார்..நேர்மறையற்றவர்கள் நிறைய பேர் இருக்காங்க. அதற்காக தனி என்சைக்ளோபிடியாவே தயாரிக்கலாம். என் மகனும் , நடனமும்தான் எனக்கு வாழ்வதற்கான நம்பிக்கையை தருகிறது “ என மனம் திறந்திருக்கிறார் ஹரிப்பிரியா.