Haripriya Isai : எங்க குடும்பம் பைத்தியக்கார குடும்பம்... லேட்டஸ்ட்டா போஸ்ட் போட்ட ஹரிப்ரியா இசை 


சன் டிவியில் ஒளிபரப்பான 'கோலங்கள்' சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் திருச்செல்வம். பெண் ஆளுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் மகளிர்கள் பேராதரவை பெற்றதால் சூப்பர் ஹிட் சீரியல் ஆனது. 


இயக்குனர் திருச்செல்வம் ரீஎன்ட்ரி :
 
ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இயக்குனர் திருச்செல்வம் 'எதிர்நீச்சல்' என்ற தொடரை அதே கான்செப்ட்டை மையமாக வைத்து இயக்கி வருகிறார். இந்த சீரியல் இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளம் தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது. இந்த சீரியல் மிகவும் ஸ்வாரஸ்யமாக சென்று கொண்டு இருக்கிறது. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் இந்த சீரியல் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்படுகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலும் இதே போல மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 



எதிர்நீச்சல் நடிகர்கள்: 


இந்த சீரியலில் மதுமிதா, கனிகா, சபரி பிரஷாந்த், ஹரிப்ரியா இசை, வைஷ்ணவி நாயக், மோனிஷா விஜய், மெர்வெண், பிரியதர்ஷினி நீலகண்டன், சத்யா தேவராஜன், பாரதி கண்ணன் அப்பல்லோ ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 


ஹரிப்ரியா இசை: 


எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதிர்வேல் எனும் கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்து வருபவர் ஹரிப்ரியா இசை. இவர் பிரியமானவள் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர். மேலும் லக்ஷ்மி வந்தாச்சு, கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, விதி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் 'வாணி ராணி' சீரியல் புகழ் விக்னேஷ் குமாருக்கும்  காதல் திருமணம் நடைபெற்று கடைசியில் மணமுறிவு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். விவாகரத்திற்கு பிறகு பல கிசுகிசுவில் சிக்கினார் ஹரிப்ரியா. அவருக்கு சன் டிவியின் தொகுப்பாளர் அசாருடன்  தொடர்பு இருப்பது இவர்களின் மணமுறிவிற்கு காரணம் என கூறப்பட்டது. அடிக்கடி இன்ஸ்டாகிராமில் அசாருடன் இணைந்து போஸ்ட் போடுவது தான் இதற்கு காரணமாக கூறப்பட்டது. ஆனால் ஹரிப்ரியா அதை மறுத்து, அசார் தன்னுடைய நண்பர் என்று விளக்கமளித்தார்.


லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் :


சமீபத்தில் ஹரிப்ரியா இசை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓர் புதிய ரீல் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில் எதிர்நீச்சல் குடும்பம் இடம்பெற்றுள்ளது. அந்த பதிவிற்கு இது ஒரு பைத்தியக்கார குடும்பம் என்று தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சீரியல் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்களை குவித்து வருகிறது. 
  






அந்த போஸ்ட் இதோ உங்களுக்காக ..