விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடர் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் செல்ப் எடுக்கவில்லை என்றாலும், விஜய் - காவேரியின் ரொமான்ஸ் காட்சிகளால் மகாநதி தொடருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது. இந்த தொடரை மக்கள் அதிகம் விரும்பி பார்க்க தொடங்கியுள்ளனர். பிற்பகலில் ஒளிபரப்பான மகாநதி தொடர் மக்களின் வரவேற்பை பெற்றதால் மாலை நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தற்போது இந்த தொடர் இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பிரவீன் பென்னட் இயக்கி வரும் இந்த தொடரில் சுவாமிநாதன், லஷ்மிபிரியா, சுவாமிநாதன், ருத்ரன் பிரவீன், ஸ்வேதா, கம்ரூதின், பேபி காவ்யா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தந்தையை இழந்த 4 சகோதரிகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்னையும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களது கணவர்களுக்கு இடைய நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.
இந்த தொடரில் அனைவரையும் கவர்ந்த கதாப்பாத்திரமாக விஜய் - காவேரி ( சுவாமிநாதன் - லஷ்மிபிரியா) இருக்கின்றனர். இவர்களால் டிஆர்பியிலும் முன்னணியில் இருக்கிறது. தற்போது விஜய் செய்யாத கொலைக்காக சிறைக்கு செல்கிறார். அவரை காப்பாற்ற காவேரி நடத்தும் போராட்டத்தை வைத்து கதை நகர்ந்து வருகிறது. தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள மகாநதி தொடர் தற்போது மலையாளத்திலும் ஒளிபரப்பாக இருக்கிறது.
மலையாளத்தில் மறு உருவாக்கம் செய்யப்படும் இந்த தொடரில் நடிக்க போறது .யார்னு தெரிந்தால் ரசிகர்கள் மிகவும் ஆச்சர்யப்படுவார்கள். இந்த புதிய தொடரில் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவாக நடித்து வரும் கோமதி பிரியாதான் காவேரி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இவருக்கு இணையராக சச்தேவ் பிள்ளை நடிக்கிறார். சுவாமிநாதன் - லஷ்மிபிரியா போன்று கோமதி பிரியா - சச்தேவும் ரசிகர்களின் மனதை கவர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மலையாளம், தெலுங்கு, தமிழ் என பிசியாக இருக்கும் கோமதி இந்த தொடரிலும் மக்களின் மனதை கொள்ளையடிக்க இருக்கிறார்.