ரூ.25 லட்சத்துக்கு கார் வாங்கிய சின்னத்திரை நடிகை கேபிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.


அதன்பின்னர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.


பிக் பாஸ் 4 ஆம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் நடிகை கேபி. அந்த சீசனில் அவர் இறுதியில் 5 லட்சம் பணப் பெட்டி உடன் வெளியில் சென்று பரபரப்பைஏற்படுத்தினர். அதற்காக அவரை அதிகம் பேர் பாராட்டினார்கள். கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சீரியல் ஈரமான ரோஜாவே. இந்த தொடரில் மலராக பவித்ரா நடித்திருந்தார். வெற்றியாக புதுமுக நடிகர் திரவியம் நடித்திருந்தார். இந்த தொடர் மிக பெரிய அளவில் ஹிட்டடித்தது.
தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கதாநாயகியாக கேப்ரியேலா நடித்து இருக்கிறார். 






இந்நிலையில் கேபி சொந்தமாக ஒரு புது கார் வாங்கி இருக்கிறார். டாடா ஹாரியர் டார்க் எடிஷன் காரை வாங்கி இருப்பதாக அவர் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார். அதன் விலை 25 லட்சம் ரூபாயை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கேபிக்கு ரசிகர்கள் இன்ஸ்டாவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  




மேலும் இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பல மாதகால யோசனைக்குப் பின்னர், நான் கார் வாங்க முடிவு செய்தேன். அதிலும் நான் டாடா ஹேரியர் டார்க் எடிசன் காரை எனது முதல் காராக தேர்வு செய்து வாங்கியதில் எனக்கு மகிழ்ச்சி. இது உங்கள் அனைவரின் அன்பாலும் ஆதரவாலும் தான் சாத்தியமாகியுள்ளது. இந்த பீஸ்ட் என்னைக் காக்க வந்திருக்கிறது. லவ் யூ ஆல்.. ஸ்ப்ரெட் லவ் என்று பதிவிட்டுள்ளார்.