நாள்: 04.05.2022


நல்ல நேரம் :


காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை





கௌரி நல்ல நேரம் :




காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை 


மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை


இராகு :


மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


குளிகை :


காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை


எமகண்டம் :


காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை


சூலம் –வடக்கு


ராசி பலன்கள் 


மேஷம் :


மேஷ ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு புதிய உற்சாகம் பிறக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதிற்கினிய சம்பவங்கள் நிகழும். 


ரிஷபம் :


ரிஷப ராசிக்காரர்களே இந்த நாள் சற்று கடினமான நாளாக அமையும். வியாபாரம் மற்றும் தொழிலில் போட்டி ஏற்படும். பணிபுரியும் இடங்களில் சுமூகமாக செல்வது நல்லது. வீண் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. சிவபெருமானை வணங்கி சிறப்பு காணலாம்.


மிதுனம் :


மிதுன ராசிக்காரர்களே மனதில் நிம்மதி ஏற்படும். நீண்டநாட்களாக நிலவி வந்த மனக்குழப்பம் அகலும். சகோதரர் வழியில் நீடித்து வந்த சிக்கல் தீரும். உடல் உபாதைகள் நீங்கும்.


கடகம் :


கடக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு போதுமான ஓய்வு எடுக்கும் வாய்ப்பு கிட்டும். நீண்ட நாட்களாக அலைந்து திரிந்த பணி இன்று சுமூகமாக முடியும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள். 


சிம்மம்:


சிம்ம ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். பண வரவு, தன வரவு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பெற்றோர் வழி உறவுகள் பக்கபலமாக துணை நிற்பார்கள். ஆதாயமான பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. 


கன்னி :


கன்னி ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு புதியவர்கள் நட்பு கிட்டும். இந்த நட்பு உங்களது தொழில் வாழ்க்கைக்கு பக்கபலமாக அமையும். மனதிற்கு இனிய சம்பவங்கள் நிகழும். தீய எண்ணங்கள் கொண்டவர்கள் உங்களை விட்டு தானாக விலகுவர். 


துலாம் :


துலாம் ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சற்று ஏமாற்றமான நாளாக அமையும். மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். வீண் அலைச்சல் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஆலய வழிபாடு மன அமைதி தரும். 


விருச்சிகம் :


விருச்சிக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் நீண்ட தூர பயணம் செய்வதற்கான சூழல் ஏற்படும். உணவுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. 


தனுசு :


தனுசு ராசிக்காரர்களே மனதில் சஞ்சலம் உண்டாகும். தேவையற்ற குழப்பங்களால் வீண் கவலை ஏற்படும். விநாகயப்பெருமானை வழிபட்டால் குறை தீரும். 


மகரம் :


மகர ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு அருமையான நாளாக அமையும். உற்றார்கள், உறவினர்கள் மத்தியில் உங்களது புகழ் அதிகரிக்கும். கணவன் மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். 


கும்பம்:


கும்ப ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். பணிபுரியும் இடங்களில் தேவையற்ற எதிர்ப்புகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் உத்தரவாதம் அளிக்கக்கூடாது. சிவபெருமானை வணங்கி நன்மை அடையலாம்.


மீனம்:


மீன ராசிக்காரர்களே மனதில் தேவையற்ற அச்சம் குடிகொள்ளும். கணவன் மனைவி இடையே வீண் சண்டை ஏற்படும். அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண