செல்லம்மா சீரியல் மூலம் பிரபலமாக இருக்கும் நடிகர் அர்ணவ் மற்றும் செவ்வந்தி சீரியல் புகழ் நடிகை திவ்யா ஸ்ரீதரும் பல ஆண்டுகளாக லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்த வந்த நிலையில் அதிரடியாக திருமணம் செய்து கொண்டு அவர்களின் திருமண புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்தனர்.
கசந்த திருமண வாழ்க்கை :
இந்த தம்பதியினரின் திருமண வாழ்க்கை கொஞ்ச நாள் கூட நீடிக்கவில்லை. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற அவர்களின் பிரச்சினை பூதாகரம் எடுத்து இணையத்தில் ஒரு பேசுபொருளாக மாறியது.
திவ்யா, அர்ணவ் மீது தொடர்ந்த வழக்கில் ஜெயிலுக்குச் சென்ற அர்ணவ் பெயிலில் வெளியே வந்தார். இருவரும் மாறி மாறி எதிர்தரப்பினர் மீது குற்றம்சாட்டி கொண்டனர். தினமும் அவர்களின் சண்டையும் சச்சரவும் இணையத்தில் தலைப்பு செய்தியாக இடம்பெற்றன.
குழந்தையுடன் திவ்யா :
இருவரும் பிரிந்து வாழும் நிலையில் கடந்த சில மாதங்களாக தான் அவர்களின் பிரச்சினை ஓயத் துவங்கியது. அர்ணவ் - திவ்யா பிரச்சினை சமயத்திலேயே திவ்யா கர்ப்பமாக இருந்த நிலையில், அவருக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த கொஞ்ச நாளிலேயே திவ்யா சீரியல் ஷூட்டிங்கில் கை குழந்தையுடன் கலந்து கொண்டார். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் திவ்யா ஸ்ரீதர் அவ்வப்போது தனது குழந்தையுடன் இருக்கும் வீடியோக்களை பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளி விடுவார்.
சமீபத்தில் கூட ஷூட்டிங் ஸ்பாட்டில் குழந்தைக்கு கஞ்சி காய்ச்சி அதை குழந்தைக்கு ஊட்டி விடும் வீடியோ ஒன்றை பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளினார்.
பிறந்தநாள் செலிப்ரேஷன் :
நடிகை திவ்யா ஸ்ரீதர் இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக தன்னுடைய உறவுக்காரப் பெண் ஒருவருடன் இணைந்து கொண்டாட்டமாக டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "மற்றுமொரு பிறந்தநாளை சிரிப்பும் சந்தோஷம் சூழ கொண்டாடுகிறேன்" என கேப்ஷன் கொடுத்து திவ்யா பகிர்ந்துள்ள இந்த வீடியோ இதயங்களைப் பெற்று வருகிறது.
திவ்யா ஸ்ரீதரின் இந்த வீடியோவுக்கு லைக்ஸ்களும் கமெண்ட்களும் குவிந்து வருகிறது. அவரின் ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் மற்றும் கன்னட தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வரும் திவ்யா ஸ்ரீதர் சன் டிவியில் ஒளிபரப்பான 'கேளடி கண்மணி' சீரியல் மூலம் பிரபலமானவர்.