கல்யாண போட்டோவை விட சோறு தான் முக்கியம் என தனது திருமண வரவேற்பில் நடிகை ஸ்ரேயா அஞ்சன் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.
கலர்ஸ் தமிழில் அறிமுகமான ஸ்ரேயா அஞ்சன் திருமணம் என்ற சீரியலில் நடித்தார். இவருடன் சித்து என்பவர் நாயகனாக நடித்தார். ரீல் ஜோடியாக காதலில் கசிந்துருகிய சித்து, ஸ்ரேயா அஞ்சன் சீரியல் நடந்து கொண்டிருந்தபோதே காதல் வயப்பட்டனர். இவர்கள் கடந்தாண்டு நவம்பரில் திருமணம் செய்துக் கொண்டனர். பாசிட்டிவ் ஜோடி என்ற பெயரெடுத்த இந்த இணை அவ்வப்போது இன்ஸ்டாவில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து சித்து விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். நடிகை ஸ்ரேயா அஞ்சன் அன்புடன் குஷி, அரண்மனை, நந்தினி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். இதனிடையே திருமண நிகழ்வுகளில் போட்டோகிராபர்கள் மணமக்களை சாப்பிட கூட விடாமல் விதவிதமாக போட்டோ எடுப்பது வழக்கம். அதனை மணமக்களும் ரசிப்பதால் இது சகஜமான ஒன்றாக உள்ளது.
ஆனால் இது சித்து - ஸ்ரேயா கல்யாண நிகழ்வில் வித்தியாசமானதாக உள்ளது. திருமண வரவேற்பில் மணமக்கள் இருவரையும் போட்டோகிராபர்கள் புகைப்படம் எடுக்கிறார்கள். அப்போது அவர்களிடம் ஸ்ரேயா, இனி அடுத்த கல்யாணம் நடக்குறப்ப என்ன பண்றீங்க தெரியுமா...சாப்பாடு போட்டு கொடுத்துட்டு போட்டோஷூட் எடுக்கணும் சரியா..என கொஞ்சும் தமிழில் கூற அப்போது சித்து குறுக்கிட்டு “ஆமா வாரா வாரம் உனக்கு கல்யாணம் பண்ணுவாங்க” என கிண்டல் செய்கிறார். உடனே ஸ்ரேயா நான் சொல்றது இனி நடக்கப்போற கல்யாணத்தை சொல்றேன் என தெரிவிக்கிறார்.
இதனைப் பார்த்த பலரும் சோறு தான் முக்கியம் என பலரின் எண்ணங்களை ஸ்ரேயா பிரதிபலிப்பதாக கமெண்டுகளில் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்